வேற லெவல்ல இருக்கு! மஹிந்திரா புதிய சின்னம் அறிமுகம்! புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய சின்னத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சின்னத்தில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் மஹிந்திரா கார் எது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

பிரபல தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா, மிக சமீபத்தில் அதன் சின்னத்தை (லோகோ) மாற்றியது. தற்போது அது விற்பனைக்கு வழங்கி வரும் கார் மாடல்களை தனது புதிய சின்னத்திலேயே நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

இந்நிறுவனத்தின் இதேமாதிரியான ஓர் செயலையே இந்த வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கையிலெடுத்துள்ளது. நிறுவனம் தனது புதிய சின்னத்தை புதுமுக தயாரிப்பான எக்ஸ்யூவி 700 காரின் வாயிலாகவே இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

மஹிந்திராவின் இந்த கார் 7 இருக்கைகள் வசதி கொண்ட வாகனமாகும். இத்துடன் எக்கசக்க சிறப்பு வசதிகளை இந்த காரில் வழங்க இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரையே டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். இந்தியர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டி வரும் இந்த கார் வரும் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இந்த நாளை எதிர்பார்த்து பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

இந்த எதிர்பார்ப்பை சற்று கூடுதலாக்கும் வகையில் தனது இப்புதிய காரை புதிய சின்னத்தில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய மஹிந்திரா கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

புதிய சின்னம் எப்படி இருக்கும் என்பது பர்றிய ஓர் வீடியோவையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மிக விரைவில் 1300 விற்பனையகங்கள் மற்றும் சர்வீஸ் பாயிண்டுகளை 823 நகரங்களில் விரைவில் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

2022ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. புதிய சின்னம் குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிகர், "இந்த புதிய அடையாளமானது (லோகோ) எங்களின் தயாரிப்புகள் தனித்துவமானவை மற்றும் தரமானவை மற்றும் வித்தியாசமானவை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

இதை உறுதிப்படுத்தும் வகையில் பிராண்டின் புதிய சின்னம் மிகவும் சிறப்பான ஒன்றாக காட்சியளிக்கின்றது. முன்னதாக 'எம்' என்ற ஆங்கில வார்த்தையாக தென்பட்டு வந்த சின்னம் தற்போது பட்டாம்பூச்சி சிறகை விரித்து பறப்பது போன்று காட்சியளிக்கின்றது. ஆனால், இதுவும் 'எம்' என்பதைக் குறிக்கும் வகையிலேயே காட்சியளிக்கின்றது.

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த மாற்றத்தை அடுத்து அனைத்து மஹிந்திர கார்கள் விற்பனையாளர்களும் புதிய சின்னத்திற்கு ஏற்ப தங்களின் விற்பனையகங்களை மாற்றியமைக்க உள்ளனர். சின்னம், நிறம் மற்றும் அலங்காரங்கள் ஆகியவற்றை அவர்கள் மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

ஆகஸ்டு 15ம் தேதி புதிய லோகோவுடன் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் 99 சதவீதம் பாக்டீரியாவை ஒழிக்கும் காற்று சுத்திகரிப்பான், புத்தம் புதிய ஸ்டைலிலான எல்இடி மின் விளக்கு, பிரத்யேகமான கைப்பிடிகள் என எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் அறிமுகமாக இருக்கின்றது.

வேற லெவல்ல இருக்கு... மஹிந்திராவின் புதிய சின்னம் அறிமுகம்... புதிய சின்னத்தில் அறிமுகமாக இருக்கும் கார் எது தெரியுமா?

எனவேதான் இந்த காரின் அறிமுகத்தை ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையுமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நாளில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்களும் அறிமுகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra unveils new logo here is full details
Story first published: Monday, August 9, 2021, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X