மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’- பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

எதிர்கால மாடல்களுக்காக மஹிந்திரா நிறுவனம் ஒரு விரிவான வரைப்பட தொகுப்பை வகுத்து வைத்துள்ளது. இந்த எதிர்கால வாகனங்களில் பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி கமர்ஷியல் வாகனங்களும் அடங்கவுள்ளன.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’... பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

இந்த நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் 'எக்ஸ்ட்ரெனோ' என்கிற பெயரை பதிவு செய்து கொண்டுள்ளது. பொலிரோவின் அடிப்படையில் மஹிந்திரா பிராண்டில் உருவாக்கப்பட உள்ள பிக்அப் ட்ரக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ள இந்த புதிய பெயர் குறித்து ரஷ்லேன் செய்திதளம் பதிவிட்டுள்ள கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’... பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

'நாங்கள் கடினமாகப் போகிறோம்' என்கிற தலைப்பில் மஹிந்திரா வெளியிட்ட அதன் எதிர்கால சிறிய ரக கமர்ஷியல் வாகனங்களில் பிக்அப் ட்ரக்குகள், 3-சக்கர வாகனங்கள், லாஸ்ட் மைல் மொபைலிட்டி உள்பட பேட்டரி வாகனங்களும் என வெவ்வேறு விதமான வாகனங்கள் அடங்குகின்றன.

இதில் பெரும்பான்மையான புதிய காம்பெக்ட் பிக்அப் ட்ரக்குகள் மஹிந்திரா பொலிரோவின் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளன. இதனால் தற்சமயம் விற்பனையில் உள்ள பொலிரோ பிக்அப் ட்ரக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயரவுள்ளது.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’... பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

இந்த திட்டத்தில் பொலிரோ கிளாசிக் மாடலை அடிப்படையாக கொண்ட இரு முழு-அளவு பிக்அப் ட்ரக்குகளை கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. எம்யூவி ரக வாகனமான பொலிரோ 2000ன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வலிமையான திறன்களினால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக விற்பனையில் இருந்து வருகிறது.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’... பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

பொலிரோவின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே பிடித்தமான மாடல் கிடையாது. நகர்புற மற்றும் கிராமப்புற என அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் இந்த மஹிந்திரா தயாரிப்பு வாகனம் பெற்று வருகிறது.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’... பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

இதனாலேயே பொலிரோவின் வேரியண்ட்களை விரிவுப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இவற்றிற்காகவே தற்போது எக்ஸ்ட்ரெனோ பெயரை பதிவு செய்து கொண்டு தனக்கு சொந்தப்படுத்தி கொண்டுள்ளது. இத்தகைய புதிய மஹிந்திரா பிக்அப் ட்ரக்குகளின் அறிமுகம் வருகிற 2023ல் இருந்து 2026க்குள் இருக்கலாம்.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’... பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

மஹிந்திரா தயாரிக்கவுள்ள லாஸ்ட் மைல் மொபைலிட்டி வாகனங்களின் வரிசையில் உடோ, அடோம், ட்ரையோ மற்றும் எல்.எம்.எம் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையிலான முற்றிலும் புதிய வாகனம் என மொத்தம் நான்கு புதிய மாடல்கள் வெளிவரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திராவின் ‘எக்ஸ்ட்ரெனோ ’- பொலிரோ பிக்அப் ட்ரக்கிற்கான புதிய பெயரா?

மஹிந்திராவின் எலக்ட்ரிக் வாகனங்களாக வெளிவரவுள்ள இவை மின்மயமாக்கப்பட்ட பவர் ட்ரெயினை ஏற்கவுள்ளன. இவற்றுடன் சிறிய ரக கமர்ஷியல் வாகனமாக ஜீட்டோ இவி என்கிற புதியதாக தயாராகவுள்ளது. நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற பிக்அப் ட்ரக்கான இதன் ரேஞ்ச் 2ல் இருந்து 3 சவாரிகளுக்கு தேவையான அளவிற்கு வழங்கப்படலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Xdreno Name Registered. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X