என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

Mahindra XUV700 காரின் உச்சபட்ச வேகம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவை யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. இத்துடன் கார் குறித்த இன்னும் சில முக்கிய விபரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவலையும், டாப் ஸ்பீடு குறித்து வெளியாகியிருக்கும் வீடியோ பற்றியுமே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

Mahindra நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகங்களில் XUV700 கார் மாடலும் ஒன்று. இந்த கார் ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது. கடந்த 14ம் தேதி அன்று இக்காரின் வெளியீட்டு நிகழ்வின்போது இந்த தகவலை Mahindra நிறுவனம் உறுதிப்படுத்தியது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

குறிப்பிட்ட முக்கிய தகவல்களை அந்நாளில் வெளியிட்ட Mahindra இன்னும் சில முக்கிய விபரங்களை வெளியிடவில்லை. ஏழு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கும் XUV700 தேர்வின் விலை மற்றும் இன்னும் பிற முக்கிய விபரங்களை வெளியிடவில்லை.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

அந்தவகையில், நிறுவனம் வெளியிடா தகவல்களில் XUV700 காரின் வேகம் பற்றிய விபரமும் ஒன்றாகும். இந்த மர்மத்தையே தற்போது ஓர் வீடியோ உடைத்திருக்கின்றது. அதாவது, Mahindra XUV700 காரின் உச்ச வேகம் என்ன பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவல் அடங்கிய வீடியோவை நிதின் ஆடோராய்ட்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

வீடியோவில் Mahindra XUV700 கார் உச்சபட்சமாக மணிக்கு 185 வேகத்தில் செல்லும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேசமயம், இக்கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனமும் இதையே உறுதிப்படுத்தியுள்ளது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

கார்களை பரிசோதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட Track இல் வைத்தே Mahindra XUV700 கார் வேக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த Track 20 விதமான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமாக எஸ்யூவி கார்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் இந்த Track உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

இது 2கிமீ நீலம், 11 மீட்டர் அகலம் மற்றும் 43.7 டிகிரி சாய்வான தடம் பல பலபரீட்சைகளை வழங்கக் கூடிய கட்டங்களை இந்த Track கொண்டிருக்கின்றது. தற்போது Mahindra நிறுவனத்தின் Research Valley அமைந்திருக்கும் பகுதியில் இருந்து சுமார் 55 கிமீ தொலைவில் Track அமைந்திருக்கின்றது.

Mahindra வின் தயாரிப்புகளிலேயே அதிக பவர்ஃபுல்லான தயாரிப்பாக XUV700 காட்சியளிக்கின்றது. இந்த காரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதே எஞ்ஜின் தேர்வுகளிலேயே தற்போது அதிக விற்பனை வரவேற்பைப் பெற்று வரும் தார் காரிலும் Mahindra வழங்குகின்றது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 200பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் ஆகிய தேர்வில் எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் 155 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கிறது. இதே எஞ்ஜின் மற்றுமொரு ட்யூன்-அப்பிலும் கிடைத்து வருகிறது. அது, 185 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!

இந்த எஞ்ஜினிலும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசி வழங்கப்படும். Mahindra நிறுவனம் எதிர்பார்க்காத நிலையில் ஐந்து இருக்கையில் விற்பனைக்கு வர இருக்கும் XUV700 காரின் விலை விபரத்தை வெளியிட்டுள்ளது. அதனை பட்டியலாகக் கீழே காணலாம்.

என்ன Mahindra XUV700 கார் இவ்ளோ வேகமா போகுமா? சாலையை அதிர வைத்த புதுமுக கார்!
Mahindra XUV700 Price
MX Petrol ₹11.99 Lakh
MX Diesel ₹12.49 Lakh
AX3 Petrol ₹13.99 Lakh
AX5 Petrol ₹14.99 Lakh
Most Read Articles

English summary
Mahindra xuv 700 top speed 185 kmph at mahindra s suv proving track
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X