மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

ஃபோர்டு இந்தியா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இறுதி ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த 31ந் தேதி காலக்கெடு இருந்தது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கைவசப்படுத்த திட்டமிடப்பட்டது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

ஆனால், கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, இரு நிறுவனங்களுக்கும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளதாக கருதின. எனவே, கூட்டு நிறுவன உருவாக்க ஒப்பந்தத்தை கைவிடுவதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

மேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தொடர்ந்து தனி நிறுவனமாக செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையில் புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டு நிறுவன உடன்படிக்கை கைவிடப்பட்ட நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கம் குறித்து சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

அதாவது, இந்த புதிய ஃபோர்டு மிட்சைஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளுக்காக ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் புராஜெக்ட் பிளாக் என்ற பெயரில் தனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

வரும் மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையிலான புதிய ஃபோர்டு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் ஃபோர்டு எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு உரிய பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Ford is working on Mahindra XUV500 based new midsize SUV and expected to launch early next year.
Story first published: Saturday, January 2, 2021, 14:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X