எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் மிட் வேரியண்ட்டின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 காரை மிக நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு முற்று புள்ளியாக வருகிற ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

ஆனால் சமீபத்திய தகவல்களின்படி பார்க்கும்போது, குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையால் இதன் அறிமுகம் இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இருப்பினும் இதன் சோதனை ஓட்டங்கள் பல மாதங்களாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டவாறு தான் உள்ளன.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

இந்த வகையில் தற்போது மீண்டும் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரின் மத்திய-வேரியண்ட் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

இந்த படங்களில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள செங்குத்தான ஸ்லாட்களுடன் சுற்றிலும் U-வடிவிலான க்ரோம் பாகத்தை கொண்ட ரீடிசைனிலான க்ரில், கூர்மையான வடிவத்தில் ஹெட்லேம்ப்கள், ரீஸ்டைலில் பொனெட் மற்றும் மத்தியில் அகலமான காற்று ஏற்பான்கள் உடன் புதிய மூடுபனி விளக்கு உள்ளிட்டவை புதிய தலைமுறை அப்கிரேட்களாக வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

புதிய எக்ஸ்யூவி500 காரின் டாப் வேரியண்ட்களில் எல்இடி டிஆர்எல்களும் வழங்கப்படவுள்ளன. இந்த சோதனை காரின் பின்பக்கம் எல்இடி டெயில்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட ஸ்டைலில் டெயில்கேட் மற்றும் பம்பர் மேற்கூரை தண்டவாளங்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா மற்றும் உயரத்தில் பொருத்தப்பட்ட நிறுத்து விளக்கு போன்றவற்றை கொண்டுள்ளது.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

சில இடங்களில் மறைப்புகள் கிழிந்துள்ளன. அந்த இடங்களில் இருந்து காரின் சிவப்பு வெளியே எட்டி பார்க்கிறது. புதிய ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் முந்தைய தலைமுறையை காட்டிலும் பரிமாண அளவுகளை சிறிது அதிகமாகவே பெற்றுள்ள புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 கார் வெளிப்புறத்திற்கு ஏற்ப உட்புறத்திலும் புதிய டேஸ்போர்டு, மைய கன்சோல், ஸ்டேரிங் சக்கரம் மற்றும் மற்ற ப்ரீமியம் தொடுதல்களை பெற்றுவரும்.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

உட்புறத்தில் மிக முக்கிய அம்சமாக பென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை இந்த புதிய மஹிந்திரா கார் ஏற்கவுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எக்ஸ்யூவி500 காரில் 2020 தாரில் அறிமுகமான 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் மேம்படுத்தப்பட்ட வெர்சனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்தப்படி அறிமுகமாகுமா மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி500 கார்?! மீண்டும் சாலையில் சோதனை...

அதிகப்பட்சமாக 190 எச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் வழக்கமான 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜினும் தொடரப்படவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Next-Gen Mahindra XUV500 Mid Variant Spotted Testing In India
Story first published: Tuesday, February 23, 2021, 0:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X