மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான ஆக்ஸஸரீகள் மற்றும் தொழிற்நுட்ப பாகங்கள் குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

மஹிந்திரா பிராண்டில் இருந்து அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் மாடல் எக்ஸ்யூவி700. இதன் அறிமுகம் வருகிற அக்டோபர் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

மஹிந்திராவின் தொழிற்சாலையில் இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் இந்த புதிய மஹிந்திரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்திருந்தன. அதேபோல் தற்போது இந்த காருக்கு வழங்கப்பட உள்ள அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் இணையத்தில் கசிந்துள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

இந்த ஆக்ஸஸரீகள் வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை புதிய எக்ஸ்யூவி700 காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தை மேலும் மெருக்கேற்றக்கூடியவைகளாக விளங்குகின்றன. இந்த வகையில் காரை கூடுதல் லக்சரி தோற்றத்தில் வாங்க விரும்புபவர்களுக்கு சாடின் க்ரோம் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

இந்த தொகுப்பை பெறுவதன் மூலமாக காரின் க்ரில், முன்பக்க பம்பர், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், பக்கவாட்டு மோல்டிங் உள்ளிட்ட பகுதிகளில் காரை பளிச்சிட்டு காட்டும் விதத்தில் க்ரோம் தொடுதல்கள் வழங்கப்படும். மேலும் தற்போது கசிந்துள்ள இந்த தகவல்கள், இந்த ஆக்ஸஸரீகளின் பயன்களையும் சுட்டிக்காட்டி உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

க்ரோம் தொடுதல்களுடன் வழங்கப்படும் மற்ற ஆக்ஸஸரீகளாக, சகதி தடுப்பான் தொகுப்பு, பக்கவாட்டு படிக்கட்டு தொகுப்பு, ரூஃப் கேரியர் தொகுப்பு மற்றும் பம்பர் பாதுகாப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் பின்பக்க பம்பர் பாதுகாப்பானை பல்வேறு டிசைன் தேர்வுகளில் பெறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

இந்த ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்களுடன் மஹிந்திரா மூன்று விதமான அலாய் சக்கர தேர்வுகளில் புதிய எக்ஸ்யூவி700 காரை வழங்கவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 17-இன்ச் க்ரே, 17-இன்ச் கருப்பு மற்றும் 18-இன்ச் க்ரே என்பவை இந்த மூன்று தேர்வுகளாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

சக்கர மூடிகள் இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டிற்கு கூட வழங்கப்பட உள்ளன. இவற்றுடன் வாடிக்கையாளர்கள் விரும்பினால் கழற்ற முடியாத போல்ட்களில் காரின் சக்கரங்களை தயாரித்தும் மஹிந்திரா வழங்குமாம். இந்த போல்ட்கள் மூலம் சக்கரங்கள் திருடு போவதை தடுக்க முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

எக்ஸ்யூவி700 காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இவற்றுடன் சில்வர், ஸ்போர்டி மற்றும் பிரீமியம் என்ற மூன்று விதமான கார் கவர் தேர்வுகளையும் மஹிந்திரா வழங்கவுள்ளது. அதேபோல் காரின் உட்புறத்தில் இருக்கை கவர்களை துளையிடப்பட்ட, டெகோ தையல் மற்றும் புடைப்பு என்ற மூன்று தேர்வுகளில் பெறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

இந்த கவர் தேர்வுகளுடன், ஸ்டேரிங் சக்கரத்திற்கான கவர் மற்றும் கியர் லிவர் கவரையும் எக்ஸ்யூவி700 காரை வாங்குபவர் தனக்கு பிடித்தாற்போல் எடுத்து கொள்ள நிறைய தேர்வுகள் உள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப இருக்கை அமைப்பில் கழுத்து தலையணை, கூடுதல் குஷினை பெறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

காரின் உட்புற தரை பாய்கள், கார்பெட் பாய்கள் மற்றும் பின்பக்க பொருட்களை வைக்கும் இடத்திற்கான பாய் உள்ளிட்டவையும் பல்வேறு விதமான தேர்வுகளில் வழங்கப்பட உள்ளன. இவை மட்டுமின்றி ஒளிரும் ஸ்கஃப் தட்டு மற்றும் அதன் பாதுகாப்பான் முதலியவையும் ஆக்ஸஸரீகளாக வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

இவ்வளவு ஏன், ஆக்ஸலரேட்டர் பெடலை கூட வாடிக்கையாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப பெற ஏகப்பட்ட தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் மத்திய வேரியண்ட்களில் வழங்கப்படும் துணை ஃபாக் விளக்குகள் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்களிலும் கூடுதல் தேர்வாக வழங்கப்பட உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய முக்கிய விபரங்கள் இணையத்தில் லீக்!! இதுதான் காரின் விலையா?

இவற்றுடன் மற்ற ஆக்ஸஸரீ தொகுப்புகளாக, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் தொகுப்பு, கதவு திறந்திருந்தால் எரியும் பிராஜெக்ட் லோகோ. வயர் இல்லா சார்ஜர், சன்ஷேட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Accessories And Merchandise Details Leak.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X