புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

புதிய எக்ஸ்யூவி700 கார் குறித்த முதல் டீசர் வீடியோவை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக 2020ஆம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள 9 கார்களில் எக்ஸ்யூவி700 மாடலும் ஒன்று.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

இன்னும் சொல்லப்போனால், மஹிந்திரா பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள மாடல் எக்ஸ்யூவி700 ஆகும். இதனாலும், இந்திய வாகனம் என்பதாலும் இந்த நீளமான எஸ்யூவி காருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

இந்த நிலையில் தான் தற்போது எக்ஸ்யூவி700 மாடலின் டீசர் வீடியோவை முதன்முறையாக மஹிந்திரா நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்கள் என்ற பிரத்யேகமான வசதி இந்த புதிய காரில் வழங்கப்பட உள்ளதை மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

இந்த தானியங்கி ஹெட்லைட் வசதியினால், இரவு நேரங்களில் காரின் வேகம் 80kmph-ஐ கடக்கும்போது தானாக கூடுதல் விளக்குகள் ஆக்டிவ்-ஆகிவிடும். இதனால் கூடுதல் பிரகாசம் கிடைக்கும். தற்சமயம் விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி500 காரின் புதிய தலைமுறை தான் எக்ஸ்யூவி700 ஆகும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

இந்த கார் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 என்ற பெயரிலேயே அறிமுகமாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் சமீபத்தில் எக்ஸ்யூவி700 பெயரை மஹிந்திரா இதற்காக பதிவு செய்து கொண்டது. பெயர் இப்போதுதான் பதிவு செய்யப்பட்டாலும், சோதனை ஓட்டங்கள் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

அப்போது கிடைக்கப்பெற்ற ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய தலைமுறை காரில் வழங்கப்பட உள்ள சில வசதிகள் நமக்கு தெரியவந்துள்ளன. புதிய எக்ஸ்யூவி700-இன் முன்பக்கத்தில் C-வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட உள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

இதுமட்டுமின்றி பின்பக்க எல்இடி டெயில்லைட்களும் C-வடிவில் ஸ்பை படங்களில் காட்சி தந்திருந்தன. இவற்றுடன் புதிய முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், ஆறு ஸ்லாட்களுடன் புதிய க்ரில், பறித்து-இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் மற்றும் புதிய அலாய் சக்கரங்களையும் புதிய எக்ஸ்யூவி700 காரில் எதிர்பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முதல் டீசர் வீடியோ வெளியீடு!! அடடே, இப்படிப்பட்ட வசதியெல்லாம் வர இருக்கா!

உட்புறத்தில் இந்த 2021 மஹிந்திரா கார் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ட்ரைவ் மோட்கள், இரட்டை-நிற உள்ளமைவு, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மெமரி செயல்பாட்டுடன் முன் இருக்கைகள், மைய கன்சோலில் சுழற்றக்கூடிய டயல் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளது.

Most Read Articles

English summary
Mahindra revealed New Auto Booster Headlamps In Upcoming XUV700
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X