மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் காரின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ள படத்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

கடந்த 2021 ஆகஸ்ட்டில் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா அதன் புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரினை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய காருக்கு முன்பதிவுகள் குவிந்த நிலையில், ஆரம்பிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் சுமார் 50 ஆயிரம் முன்பதிவுகள் எக்ஸ்யூவி700 காரின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஹிந்திரா அப்போது அறிவித்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

தற்போது வரையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான எக்ஸ்யூவி700 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு முன்பதிவுகள் குவிந்து வருவது ஒருபக்கம் மஹிந்திராவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபக்கம் இவற்றை சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க வேண்டும் என்பது நிச்சயமாக தலைவலியாக இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

ஏனெனில் தற்சமயம் மொத்த ஆட்டோமொபைல் துறையும் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருவதை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். இந்த நிலை மெல்ல மெல்ல சீராகி வந்தாலும், இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடைந்துள்ள பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

எக்ஸ்யூவி700 காரிலும் அதிகளவில் குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளை பெறும் இதன் டாப் ஏஎக்ஸ்7 வேரியண்ட்டில் அதிக எண்ணிக்கையில் குறைக்கடத்திகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் வருகிற ஜனவரி மாத பாதிக்குள் மொத்தம் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

எக்ஸ்யூவி700 காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் டெலிவிரிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து துவங்கப்பட்ட நிலையில், டீசல் என்ஜின் உடனான எக்ஸ்யூவி700-இன் வேரியண்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள படங்களை தான் கீழே காண்கிறீர்கள்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

டீசல் என்ஜின் உடன் எக்ஸ்யூவி700 காரை முதல் ஆளாக டெலிவிரி பெற்றிருக்கும் வாடிக்கையாளரின் பெயர் சுரேஷ் சுதர் ஆகும். இவர் எக்ஸ்யூவி700 டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டான ஏஎக்ஸ்7ஆட்டோமேட்டிக்கை டெலிவிரி பெற்றுள்ளார். சுரேஷ் சுதர் மட்டுமின்றி, முதலாவதாக எக்ஸ்யூவி700 டீசல் கார்களை முன்பதிவு செய்தவர்களும் நாடு முழுவதும் தங்களது கார்களை டெலிவிரி பெற்று வருகின்றனர்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

இந்திய மக்களை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கவர்ந்திழுப்பதற்கு காரணங்களாக பார்த்தோமேயானால், அதன் தோற்றம், சவாலான விலைகள் மற்றும் பிரிவிலேயே முதல் மாடலாக பெற்றுள்ள சில வசதிகளை கூறலாம். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 மாடலை போல் எம்.எக்ஸ், ஏஎக்ஸ்3, ஏஎக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ்7 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் களமிறக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி700-ஐ 5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் பெறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

மஹிந்திரா நிறுவனம் தீவிர ஆலோசனைக்கு பிறகு அதன் புதிய பிராண்டின் லோகோவை இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டது. இறக்கை போன்றதான வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மஹிந்திரா லோகோவை பெற்று வந்துள்ள முதல் மாடலாக எக்ஸ்யூவி700 விளங்குகிறது. அதுமட்டுமின்றி பிரிவிலேயே முதல் மாடலாக அமேசான்-அலெக்ஸா இணைப்பு, டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் இரு திரைகள், அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS) போன்ற அம்சங்களையும் இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

மேலும் சன்ரூஃப்-ஐயும் பிரிவிலேயே மற்ற போட்டி மாடல்களை காட்டிலும் பெரியதாக எக்ஸ்யூவி700 கொண்டுள்ளது. இவற்றுடன் 3டி சவுண்ட் அவுட்புட் உடன் 12 ஸ்பீக்கர் சோனி சிஸ்டம், நினைவக செயல்பாட்டுடன் எலக்ட்ரிக் மூலமாக 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் முழு-டிஜிட்டல் ஓட்டுனர் திரை போன்றவையும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

இவை போதாது என்போர்க்காக கேபினில் பொருத்தக்கூடிய ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளையும் எக்ஸ்யூவி700 உடன் மஹிந்திரா வழங்குகிறது. இதில் குஷின் தலையணைகள், கழுத்து தலையணைகள் மற்றும் இரு சீட் பெல்ட் பேட்கள், ஸ்டேரிங் சக்கர கவர், இருக்கை கவர்கள், தரை பாய்கள், ஒளியூட்டப்பட்ட ஸ்கஃப் தட்டுகள் உள்ளிட்டவற்றை சொல்லாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் கார்களின் டெலிவிரி துவங்கியது!! மகிழ்ச்சியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள்!

இவை கூடுதல் ஆக்ஸஸரீகளே. அதாவது இவற்றை பெறுவதற்கு கூடுதல் தொகையினை செலுத்தி வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், இருக்கை கவர்கள் ரூ.9,250இல் விற்கப்படுகின்றன. அதேநேரம் ரூ.12,250 என்ற விலையிலும் சற்று பிரீமியம் தரத்திலான இருக்கை கவர்களும் கிடைக்கின்றன. மேலும், இந்த ஆக்ஸஸரீகள் எக்ஸ்யூவி700-இன் வேரியண்ட்களை பொறுத்து வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
mahindra xuv700 diesel delivery.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X