புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி இந்த நிறங்களில் கூட கிடைக்கவுள்ளதா? உங்களது சாய்ஸ் எது?

புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காருக்கு வழங்கபட உள்ள நிறத்தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 அடுத்த அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஐந்து விதமான பெயிண்ட் தேர்வுகள் இந்த பெரிய அளவிலான எஸ்யூவி காருக்கு வழங்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

இந்த ஐந்து நிறங்களாவன, சிவப்பு, மிட்நைட் கருப்பு, எவரெஸ்ட்டின் வெள்ளை, எலக்ட்ரிக் நீலம் மற்றும் கவர்ச்சிகரமான சில்வர் என்பவையாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிக நீண்ட வேரியண்ட்கள் லிஸ்ட்டை பெற்றுவரவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மொத்தம் 34 வேரியண்ட்களில் இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட உள்ளதாம்.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

என்ஜின் தேர்வுகளாக எக்ஸ்யூவி700-இல் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட உள்ளன. இதில் டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 197.2 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 184.4 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியது.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

இந்த என்ஜின்களுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட உள்ளன. அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் இந்த எஸ்யூவி காரின் டாப் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் மட்டும் வழங்கப்பட உள்ளது. 0-வில் இருந்து 60kmph வேகத்தை இந்த காரில் வெறும் 5 வினாடிகளில் எட்டிவிட முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

வெளிப்பக்கத்தில் எக்ஸ்யூவி700 ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் புதிய C-வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், செங்குத்தான ஸ்லாட்களுடன் புதிய க்ரில், புதிய முன் & பின்பக்க பம்பர்கள், ஃபாக் விளக்குகள், இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், மேற்கூரை தண்டவாளங்கள், கருப்பு நிற பில்லர்கள், வ்ராப்-ஆல் சூழப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் சில்வர் நிறத்தில் ஸ்கிட் தட்டுகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

உட்புறத்தில் 10.25 இன்ச்சில் இரு திரைகளை இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி வாகனம் பெற்றுள்ளது. இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கானது, மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது ஆகும். இவற்றுடன் கேபினை அழகாக்கும் விதத்தில் பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் எக்ஸ்யூவி700 பெற்று வரவுள்ளது.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

இதனுடன் இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், 360-கோண கேமிரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், வயர்லெஸ் சார்ஜிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பல-செயல்பாட்டு தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், மெமரி செயல்பாட்டுடன் முன் இருக்கைகள் மற்றும் 4 ட்ரைவ் மோட்கள் போன்றவையும் இந்த காரில் வழங்கப்பட உள்ளன.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

இவை மட்டுமின்றி, பிராண்டின் அட்ரேனோ எக்ஸ் தொழிற்நுட்பம் மற்றும் அட்வான்ஸ்டு ஓட்டுனர் உதவி அமைப்புகளையும் கூட எக்ஸ்யூவி700-இல் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. முன்னதாக விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலின் அடுத்த தலைமுறையாக வெளிவரவுள்ளதால், அதனை காட்டிலும் மேம்பட்ட தயாரிப்பாக எக்ஸ்யூவி700 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

மோனோகாக் சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் முதல் எஸ்யூவி எக்ஸ்யூவி500 ஆகும். வெளிநாட்டு சந்தைகளில் மஹிந்திரா தயாரிப்புகள் பிரபலமானதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கிய எக்ஸ்யூவி500 இந்திய சந்தையில் முதன்முதலாக 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இத்தனை வருடங்களில் சில முறை எக்ஸ்யூவி500 மாடலை மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

தற்போது முற்றிலும் மாறுப்பட்டதாக எக்ஸ்யூவி700-ஐ கொண்டுவருகிறது. எக்ஸ்யூவி500 காரை போலவே புதிய எக்ஸ்யூவி700 மாடலிலும் அதன் பிரிவிலேயே முதல்முறையாக பல வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய தலைமுறை என்பதை பெயரில் மட்டும் இல்லாமல், செயலிலும் மஹிந்திரா நிறுவனம் செய்துக் காட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஐந்து விதமான நிறங்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி!! உங்களது தேர்வு எது?

இந்த காரை ஏற்கனவே நாங்கள் டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்த்துவிட்டோம். அப்போது, எங்களுக்கு இந்த எஸ்யூவி சிறப்பான ட்ரைவிங் அனுபவத்தை வழங்கியது. பாடி ரோல் மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த காரில் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.11.99 லட்சத்தில் நிர்ணயிக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Colour Option Revealed.
Story first published: Friday, September 17, 2021, 7:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X