மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி நீண்ட காலமாக இருந்து வருகிறது. கம்பீரமான டிசைன், போதுமான வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலையில் கிடைப்பதுடன் 7 சீட்டர் மாடல் என்பது இதனை முன்னிறுத்தும் அம்சமாக இருந்து வந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

இந்த நிலையில், சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள இந்த சூழலில், எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக புத்தம் புதிய மாடலை மஹிந்திரா களமிறக்க உள்ளது. எக்ஸ்யூவி700 என்ற புதிய பெயரில் வர இருக்கும் இந்த எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று மஹிந்திரா உறுதிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் கணிப்பு தெரிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. எக்ஸ்யூவி500 எஸ்யூவியை வீல்பேஸ் நீளம் அதிகம் கொடுக்கப்பட உள்ளதால், மூன்று வரிசை இருக்கைகளிலும் பயணிகளுக்கு போதுமான இடவசதி கிடைக்கும் என கருதலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் லெவல்-1 தர நிர்ணயம் கொண்ட ஆட்டோனாமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இதனால், ஆட்டோமேட்டிக் பார்க்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளை பெற்றிருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வழங்கப்படுவது போன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை ஒரே திரை அமைப்பாக கொடுக்கப்படும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பல்வேறு செயற்கை நுண்ணறி திறன் மூலமாக இயங்கும் வசதிகளையும், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப முறையில் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை வழங்கும் வகையில் இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலின் நடுவரிசையில் பெஞ்ச் இருக்கை அமைப்பும் இடம்பெறும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் அறிமுகம் எப்போது? புதிய தகவல் வெளியானது!

எல்இடி லைட்டுகள், சன்ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட இருக்கைகள் முக்கிய அம்சங்களாக இருக்கும். சக்திவாய்ந்த புதிய பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்களும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
According to the report from Autocar India, the Mahindra XUV700 is expected to be launched sometime in October 2021. Once launched, the XUV700 will be placed above the outgoing XUV500.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X