6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

ஆறு-இருக்கை மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாடல் தயாரிப்பு பணிகளில் உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்களை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் தற்சமயம் 5-இருக்கை (2 இருக்கை வரிசை) மற்றும் 7-இருக்கை (3 இருக்கை வரிசை) என்கிற இரு விதமான இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

இவற்றுடன் விரைவில் 6-இருக்கை தேர்விலும் இந்த நீண்ட எஸ்யூவி காரை விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. 6 இருக்கை அமைப்புகளுடன் எக்ஸ்யூவி700 காரின் உட்புற கேபினின் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை டீம் பிஎச்பி செய்திதளம் படமாக வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

Source: Team BHP

இந்த படத்தில், எக்ஸ்யூவி700 6-இருக்கை கார் உட்புறத்தில் 2 கேப்டன் இருக்கைகளை இரண்டாவது வரிசையில் தனித்தனியான கை தலையணைகளுடன் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. தற்போதுவரையில் எக்ஸ்யூவி700 காரின் இரண்டாவது இருக்கை வரிசையில் மேசை இருக்கை அமைப்பே வழங்கப்படுகிறது. ஆனால் இதன் நேரடி போட்டி மாடலான டாடா சஃபாரி 2வது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கைகளை பெறுகிறது.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

தற்போது தகவல்கள் வெளியாகி இருந்தாலும், 6-இருக்கை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் பல மாதங்களாகலாம். ஏனெனில் இந்த கார் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை. ஏனெனில் தற்சமயம் மஹிந்திரா உள்பட பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம்.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

இதன் விளைவாக, சிறுத்தை போன்ற தோற்றம் கொண்ட புதிய எக்ஸ்யூவி700 கார்களை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு அதிகப்பட்சமாக சுமார் 19 மாதங்களில் இருந்து 20 மாதங்கள் வரையில் உள்ளன. இந்த நிலை சரியாகி தயாரிப்பு பணிகள் வேகமெடுக்க ஆரம்பித்தால், கேப்டன் இருக்கைகளை கொண்ட எக்ஸ்யூவி700 வேரியண்ட்களை மஹிந்திரா அறிமுகப்படுத்த பார்க்கும்.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

இந்த எஸ்யூவி வாகனம் டீசல் & பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் எக்ஸ்யூவி700-இல் வழங்கப்படும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களுக்கான முன்பதிவுகள் அதனை தொடர்ந்தூ அக்.7ஆம் தேதி துவங்கப்பட்டன. முன்பதிவுகள் துவங்கப்பட்ட வெறும் 3 மணிநேரத்திற்குள் சுமார் 50 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்கள் புக் செய்யப்பட்டது அந்த சமயத்தில் பலரை வெகுவாக ஆச்சிரியப்படுத்தி இருந்தது.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

ஏனெனில் இவ்வளவு விரைவாக, இவ்வளவு அதிகமாக வேறெந்த காருக்கும் இதற்கு முன்னர் நம் நாட்டில் முன்பதிவு செய்யப்பட்டது கிடையாது. தேவை அதிகமாகினால் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரிக்கும் என்பது வழக்கமான ஒன்றுதானே. ஆனால் இதனை மஹிந்திரா திறம்பட கையாளக்கூடிய நிறுவனம் தான்.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

இருந்தாலும் ஏற்கனவே கூறியதுபோல், குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறையால் எக்ஸ்யூவி700 உள்பட கார்கள் பலவற்றை தயாரிக்க முடியாமல் இந்த நிறுவனம் தத்தளித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே எக்ஸ்யூவி700 கார்களுக்கான வெயிடிங் ப்ரீயட் 1.5 வருடத்தை கடந்து 2 ஆண்டுகள் வரையில் உள்ளது. இவ்வளவு ஏன், அக்.7ஆம் தேதி இந்த நீண்ட எஸ்யூவி காரை புக் செய்தவர்கள் கூட காரை டெலிவிரி எடுக்க வரும் 2022ஆம் வருடத்தின் இரண்டாம் பாதி வரையில் காத்திருக்க வேண்டிய நிலைமையே உள்ளது.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

அப்போது முன்பதிவு செய்தவர்களுக்கே இந்த நிலை என்றால், இப்போது எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தால் சொல்லவா வேண்டும். சமீபத்தில் நமக்கு கிடைத்திருந்த தகவல்களின்படி, இந்த டிசம்பர் மாதத்தில் இந்த எஸ்யூவி காரை முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகப்பட்சமாக 2023 மே மாதம் வரையில் டெலிவிரி தேதியை மஹிந்திரா ஒதுக்கி தருகிறதாம்.

6 இருக்கைகளுடன் தயாராகிறதா மஹிந்திரா எக்ஸ்யூவி700? தகவல்கள் இணையத்தில் லீக்!

இது நிச்சயமாக விரைவில் இந்த காரை புக் செய்ய நினைத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை தராது. இந்த காத்திருப்பு காலம் எக்ஸ்யூவி700 காரின் நிறம், வேரியண்ட் மற்றும் அவற்றில் பொருத்தப்படும் பாகங்களை பொறுத்து வேறுப்படுகிறது. இப்படிப்பட்ட தற்போதைய நிலையில் தான் 6-இருக்கை தேர்வில் எக்ஸ்யூவி700 மாடலை அறிமுகப்படுத்த மஹிந்திரா தயாராகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 to get 6-seater variant with captain seats.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X