வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

Mahindra XUV700 காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Mahindra XUV700 எஸ்யூவி சமீபத்தில் வெளியிடப்பட்டது. XUV700 வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சில வேரியண்ட்களுக்கான விலையை அறிவித்து Mahindra நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்தது. ஆனால் இன்னும் அனைத்து வேரியண்ட்களுக்குமான முழுமையான விலை பட்டியல் வெளியாகவில்லை.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

இந்த சூழலில் XUV700 காரின் உற்பத்தி பணிகளை Mahindra நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. எனினும் இந்தியா முழுவதும் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு XUV700 வந்து சேர்வதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு முன்னதாக Mahindra XUV700 டீலர்ஷிப்களுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

இதை தொடர்ந்து டீலர்ஷிப்களில் இந்த எஸ்யூவி காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Mahindra XUV700 எஸ்யூவி காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். அப்போது இந்த எஸ்யூவியின் ஒவ்வொரு அம்சமும் எங்களை கவர்ந்தது.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

Mahindra XUV700 எஸ்யூவி கார் மிகவும் பிரீமியமாக உள்ளது. நிச்சயமாக கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக Mahindra XUV700 எஸ்யூவி இருக்கும். இந்திய சந்தையில் MG Hector Plus, Tata Safari மற்றும் Hyundai Alcazar உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் Mahindra XUV700 எஸ்யூவி போட்டியிடும்.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

ஆனால் விலை அடிப்படையில் பார்த்தால், MG Hector, Tata Harrier, Kia Seltos, Hyundai Creta மற்றும் Skoda Kushaq ஆகிய எஸ்யூவி கார்களுடனும் Mahindra XUV700 போட்டியிடவுள்ளது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Volkswagen Taigun எஸ்யூவி காருக்கும் Mahindra XUV700 சவால் அளிக்கவுள்ளது.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் Mahindra XUV700 எஸ்யூவி கிடைக்கும். இதில், பெட்ரோல் இன்ஜின் 2.0 லிட்டர் mStallion யூனிட் ஆகும். அதே சமயம் டீசல் இன்ஜின் 2.2 லிட்டர் mHawk யூனிட் ஆகும். இந்த இரண்டு இன்ஜின்களும் மிக சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

அதே சமயம் Mahindra நிறுவனம் டீசல் இன்ஜின் உடன் ஆல் வீல் டிரைவ் வெர்ஷனையும் வழங்கவுள்ளது. டாப் வேரியண்ட்களில் மட்டுமே இது கிடைக்கும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

Mahindra XUV700 எஸ்யூவி காரின் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் இரண்டு வகையான ட்யூனிங்கில் கிடைக்கும். விலை குறைந்த வேரியண்ட்களில் வழங்கப்படும் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 155 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

அதே நேரத்தில் விலை உயர்ந்த வேரியண்ட்களில் வழங்கப்படும் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 185 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதேபோல் Mahindra XUV700 எஸ்யூவி காரில், பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், Alexa Connectivity, Smart Door Handles, Sony நிறுவனத்தின் 3d Surround System உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

மேலும் Dual-zone Climate Control வசதியையும் Mahindra XUV700 பெற்றுள்ளது. அத்துடன் Advanced Driver Assistance System (ADAS) வசதியும் Mahindra XUV700 எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளது. Autonomous Emergency Braking, Driver Drowsiness Detection மற்றும் Adaptive Cruise Control உள்ளிட்ட வசதிகளை Mahindra XUV700 எஸ்யூவி பெற்றுள்ளது.

வேற லெவல் கார்... Mahindra XUV700 உற்பத்தி தொடக்கம்... வெயிட் பண்ண முடியல... சீக்கிரமா டெலிவரி கொடுங்கப்பா!

மேலும் இந்த செக்மெண்ட்டிலேயே பெரிய Panoramic Sunroof வசதியும் XUV700 எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளது. இங்கே கூறப்பட்டுள்ளவை ஒரு சில வசதிகள் மட்டுமே. இன்னும் நிறைய வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் பிரீமியமாக Mahindra XUV700 எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது.

Image Courtesy: weguide.auto

Most Read Articles

English summary
Mahindra xuv700 production begins check details here
Story first published: Saturday, August 21, 2021, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X