புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காருக்கு இந்தியாவில் இன்று காலை முதல் புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் தொடங்கப்பட்ட வெறும் 57 நிமிடங்களில் முதல் 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம், இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் எக்ஸ்யூவி700 (XUV700) காருக்கான புக்கிங்கை இன்று (அக்டோபர் 7) காலை நாட்டில் தொடங்கியது. இந்த புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட முதல் 57 நிமிடங்களிலேயே 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன் பதிவு கிடைத்துவிட்டதாக நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

இந்த தகவல் இந்திய வாகன சந்தையில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சமீபத்தில், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி100 காரின் விலை விபரத்தை வெளியிட்டிருந்தது. ஆரம்ப நிலை வேரியண்டிற்கு ரூ. 11.99 லட்சம் என்ற விலையையும், உயர்நிலை வேரியண்டிற்கு ரூ. 21 லட்சத்திற்கும் அதிகமான விலையையும் நிறுவனம் நிர்ணயித்திருந்தது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

ஆனால், இந்த விலையானது எக்ஸ்யூவி700 காரை புக் செய்யும் முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிபந்தனையை விதித்திருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் புக்கிங்கை எக்ஸ்யூவி700 பெற்றிருக்கின்றது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

தற்போது 25 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கைப் பெற்றிருப்பதால் எக்ஸ்யூவி700 காரின் விலையில் மஹிந்திரா மாற்றம் செய்திருக்கின்றது. ஆம், ஆரம்ப நிலை வேரியண்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 11.99 லட்சமாக இருந்த ஆரம்ப நிலை தேர்வின் விலை தற்போது ரூ. 12.49 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

அனைத்து தேர்வுகளின் விலையிலும் ரூ. 50 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புக்கிங் அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே விலையில் புதிய உயர்வுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஒரே கார் என்ற பெருமையை மஹிந்திரா எக்ஸ்யூவி700 சூடியிருக்கின்றது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

புதிய விலை பட்டியலைக் கீழே காணலாம்.

MX Series
Fuel Type 5-Seater (MT)
MX Petrol ₹12.49 Lakh
Diesel ₹12.99 Lakh
AndrenoX Series
Fuel Type MT AT
AX3

(5-Seater)

Petrol ₹14.49 Lakh ₹15.99 Lakh
Diesel ₹14.99 Lakh* ₹16.69 Lakh
AX5

(5-Seater)

Petrol ₹15.49 Lakh** ₹17.09 Lakh
Diesel ₹16.09 Lakh** ₹17.69 Lakh**
AX7

(7-Seater)

Petrol ₹17.99 Lakh ₹19.59 Lakh
Diesel ₹18.59 Lakh ₹20.19 Lakh
Diesel + AWD NA ₹21.49 Lakh
AX7 Luxury

(7-Seater)

Petrol NA ₹21.29 Lakh
Diesel ₹20.29 Lakh ₹21.89 Lakh
Diesel + AWD NA ₹22.99 Lakh
*Also available in 7-Seater at an additional ₹ 70,000
**Also available in 7-Seater at an additional ₹ 60,000
புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எம்எக்ஸ் (MX) மற்றும் ஏஎக்ஸ் (AX) என இரு விதமான ட்ரிம்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த ட்ரிம்களின்கீழ் ஒட்டுமொத்தமாக 28 தேர்வை மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களைக்கு வழங்குகின்றது. ஆம், 28 விதமான வேரியண்டுகளில் எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

ஏஎக்ஸ்7 லக்சூரி எம்டி (AX7 Luxury MT), ஏஎக்ஸ்7 ஏடி ஏடபிள்யுடி (AX7 AT AWD) மற்றும் ஏஎக்ஸ்7 லக்சூரி ஏடி ஏடபிள்யுடி (AX7 Luxury AT AWD) ஆகிய தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்விலும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

பெட்ரோல் வெர்ஷனில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 197 பிஎச்பி திறனையும், 380 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் தேர்வு வழங்கப்படுகின்றது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

டீசல் வெர்ஷனில், 2.2 லிட்டர், 4 சிலிண்டர் எம்ஹாவ்க் ஆயில் பர்னர் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதந் எஞ்ஜினை மூன்று விதமான ட்யூன்-அப்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது. 153 பிஎச்பி - 360 என்எம் டார்க், ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 182 பிஎச்பி - 420 என்எம் டார்க் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு தானயிங்கி டார்க் கன்வெர்டர் ஆகிய ட்யூன் அப்களிலேயே இந்த மோட்டார் வழங்கப்படுகின்றது.

புக்கிங் தொடங்கிய 57 நிமிடத்தில் 25,000 முன்பதிவுகள்... உடனே விலைய ஏத்திட்டாங்க! அமோக வரவேற்பில் XUV700!

வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இத்தகைய பன்முக தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 காரில் அறிமுகம் செய்திருக்கின்றது. தீபாவளியை முன்னிட்டு மிக விரைவில் இக்காரின் விற்பனைக்கான அறிமுகத்தை நிறுவனம் செய்ய இருக்கின்றது. மேலும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய விலையிலேயே எக்ஸ்யூவி 700 விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv700 registers unprecedented 25000 bookings in 57 minutes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X