ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி700 & தார் வாகனங்கள் ஒன்றாக ஹிமாச்சல பிரதேச மலைப்பகுதியில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்யூவி700, புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் புதிய முயற்சியாக தாரின் லைன்அப்பில் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வெளிவரவுள்ளன.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

இவை அனைத்தும் தான் தற்போது ஹிமாச்சல பிரதேசத்தின் மலை சாலையின் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை டீம் பிஎச்பி செய்தி தளம் அடையாளம் கண்டுள்ளது. இந்த செய்திதளத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்களில் இந்த மஹிந்திரா கார்கள் வரிசையாக சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

இரு ஸ்கார்பியோ, மூன்று எக்ஸ்யூவி700 மற்றும் இரு தார்கள் என மொத்தம் 7 மஹிந்திரா சோதனை வாகனங்கள் இந்த சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இரு தார் வாகனங்கள் மட்டும் மறைப்பு எதையும் உடுத்தியிருக்கவில்லை. மற்றவைகளின் தோற்றம் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

ஏனெனில் தாரின் விலை குறைவான வேரியண்ட்டான இதில் இயந்திர பாகங்களில் மட்டுமே மாற்றங்கள் கொண்டுவரப்படும். எங்களுக்கு தெரிந்தவரையில் நகர்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் 2-சக்கர ட்ரைவ் வசதி கொண்டதாக இந்த மலிவான வேரியண்ட் வடிவமைக்கப்படலாம்.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

ஆனால் ஸ்கார்பியோ முற்றிலும் புதிய தோற்றத்தை பெற்றுவரவுள்ளது. பல வருடங்களாக அப்கிரேடை பெறாமல் இருந்த ஸ்கார்பியோ புதிய தலைமுறையில் உருவத்தில் சற்று பெரியதாக கொண்டுவரப்படுகிறது. ஸ்கார்பியோவின் ஆஃப்-ரோடு திறனை மேம்படுத்தும் வகையில் இதில் 4x4 வன்பொருளை மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

தோற்றம் மட்டும் புதியது அல்ல, என்ஜின் தேர்வுகளிலும் புதியதாக, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தாரின் 2.0 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் ‘எம்ஹாவ்க்' டீசல் என்ஜினை ஸ்கார்பியோ பெறவுள்ளது.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

மூன்றாவது கார் மாடலான எக்ஸ்யூவி700 வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அறிமுகம் நெருங்கி கொண்டு வருவதால் இந்த எஸ்யூவி காரை சோதனை செய்யும் பணிகளில் மஹிந்திரா தீவிரமாக இறங்கியுள்ளது.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 தான் எக்ஸ்யூவி700 என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. எக்ஸ்யூவி700 ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை பெற்றுவரவுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங், பாதையை மாற்ற உதவி உள்ளிட்ட நிலை-1 தானியங்கி தொழிற்நுட்பங்களும் அடங்குகின்றன.

ஹிமாச்சல மலைப்பகுதியில் வரிசையாக காட்சிதந்த வருங்கால மஹிந்திரா கார்கள்!! எது முதலில் அறிமுகமாகுமோ!

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளுடனும் எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்படவுள்ள நிலையில் இந்த எஸ்யூவி கார் மூன்று டீசல் என்ஜின் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.

Most Read Articles

English summary
New Mahindra Scorpio, XUV700 & Thar Spied Testing Together In Himachal Pradesh: Pics & Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X