முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 XUV700 முதல் மாத விற்பனை பற்றிய தகவலும், ஒட்டுமொத்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை பற்றிய தகவலும் வெளிவந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

மஹிந்திரா நிறுவனத்தின் அண்மை அறிமுகமாக எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் இருக்கின்றது. இந்த காரை இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, மஹிந்திரா. இதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று காருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியது.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

இது தொடங்கப்பட்ட முதல் நாள் முதல் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குள் குவிந்தன. இதேபோல், இரண்டாம் நாளில் இரண்டு மணி நேரங்கள் மற்றும் 5 நிமிடங்களுக்கு உள்ளாக மற்றுமொரு 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகளை எக்ஸ்யூவி700 பெற்றது. கடந்த மாத நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 65 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங்கை இக்கார் பெற்றிருக்கின்றது.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

இதுமாதிரியான அபரிதமான புக்கிங்கைத் தொடர்ந்து தற்போது முதல் மாத விற்பனையிலும் எக்ஸ்யூவி 700 புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பிற அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய எஸ்யூவி கார்களைக் காட்டிலும் அதிகளவில் அது விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

ஆனால், துள்ளியமான யூனிட் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. மிக விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 12.49 லட்சம் என்ற விலையிலும், உயர்நிலை வேரியண்ட் ரூ. 22.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

இக்காரை மோனோகோக்யூ சேஸிஸில் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அதிகம் பிரீமியம் தர வசதிகளை நிறுவனம் மிகவும் தாராளமாக வழங்கியிருக்கின்றது. ஐந்து மற்றும் ஏழு இருக்கை தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். மஹிந்திரா நிறுவனம் வரும் 2022 ஜனவரி 14ம் தேதிக்குள் நாள் ஒன்றிற்கு 187 வாகனங்கள் என ஒட்டுமொத்தமாக 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார்களை டெலிவரி செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

எக்ஸ்யூவி700 கார் மாடல் மட்டுமின்றி ஸ்கார்பியோ, தார், பொலிரோ ஆகிய கார் மாடல்களும் 2021 அக்டோபரில் அதிகளவில் விற்பனையாகி இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 20,034 யூனிட் விற்பனை என்ற பெரும் விற்பனை வளர்ச்சியை நிறுவனத்திற்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இது கடந்த 2020 அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் அதிகம் ஆகும். 18,317 யூனிட் வரை மட்டுமே அப்போது விற்பனையாகி இருந்தது. இதைக் காட்டிலும் நடப்பாண்டு அக்டோபரில் மஹிந்திரா 9 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் (இரு விதமான ட்யூன்-அப்பில் இது கிடைக்கும்) மற்றும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 டார்க் கன்வெர்டர் ஏடி ஆகிய கியர்பாக்ஸ் வசதியுடன் வழங்கப்படுகின்றன.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

இதில் தற்போது பெட்ரோல் வேரியண்டின் டெலிவரி பணிகள் கடந்த 30ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதன் டீசல் வேரியண்டின் டெலிவரி பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எக்ஸ்யூவி700 காரில் தொழில்நுட்ப அம்சங்கள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.ஸ்கைரூஃப் வசதி, ஸ்மார்ட் டூர் ஹேண்டில்கள், இன்டலிஜென்ட் காக்பிட், டைமண்ட் கட் அலாய் வீல், துள்ளியமான பார்வை திறனை வழங்கக் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், குரோம் பூச்சுக் கொண்ட க்ரில் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

முதல் மாசத்திலேயே தரமான சம்பவம்... Safari, Alcazar, Hector என எல்லாத்தையுமே XUV700 ஓரம் கட்டியிருக்கு!

இத்துடன், முழு வண்ண டிஜிட்டல் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், அடாஸ், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், இபிடி, இஎஸ்பி, டிசி, ஏபிஎஸ், ஏழு ஏர் பேக்குகள், ஹைபீம் அசிஸ்ட், இரு ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பன்முக டிரைவிங் மோட்கள் ஆகிய அம்சங்களும் எக்ஸ்யூவி700 காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv700 suv beats tata safari hyundai alcazar and mg hector
Story first published: Wednesday, November 3, 2021, 20:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X