உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

Mahindra நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் உலகளவில் XUV700 மாடல் அறிமுகமானது. கவர்ச்சிக்கரமான தோற்றத்தினாலும், புதிய என்ஜின் தேர்வுகளினாலும் இந்த புதிய நீளமான Mahindra எஸ்யூவி காருக்கு பலதரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்புகள் குவிந்து வருகின்றன.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

இந்த பாராட்டுகளை எல்லாம் பெற்று கொள்ளும் அதேநேரம் Mahindra நிறுவனம் புதிய XUV700 காரை உலகளாவிய NCAP சோதனைக்கு உட்படுத்தவும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் XUV700-இன் அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மோட்டார் விகடன் யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.

Image Courtesy: Motor Vikatan

உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு சோதனைகள் அனைத்திலும் இந்த புதிய மாடல் தேர்ச்சி பெறும் என Mahindra நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது. Mahindra-வின் எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி, உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு சோதனையில் அதிக மதிப்பெண்களை பெற்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் காராக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

உலகளாவிய NCAP சோதனையில் இன்னும் மோதல் சோதனையை XUV700 முழுமை செய்யவில்லை. XUV700 காரில் 7 காற்றுப்பைகள், EBD உடன் ABS, ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் & கேமிரா உள்பட ஏகப்பட்ட அட்வான்ஸான ஓட்டுனர் உதவி அமைப்புகளை Mahindra வழங்கியுள்ளது.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

இதனால் இந்த மோதல் சோதனையில் XUV700 எவ்வளவு மதிப்பெண்களை பெறும் என்பதை அறிய உங்களை போல் நாங்களும் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வாடிக்கையாளர்கள் கார்களின் மைலேஜ், விலைகளை பார்த்து வாங்குவதில் இருந்து மெல்ல மெல்ல பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

ஆதலால்தான், Mahindra நிறுவனம் XUV700 காரை மிகவும் பாதுகாப்பான காராகவே தயாரித்து உள்ளது. மேலுள்ள வீடியோவில் இந்த எஸ்யூவி வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் ஒவ்வொன்றாக எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பது பகுதிப்பகுதியாக கூறப்பட்டுள்ளது. இந்த ஒரு வீடியோ மட்டுமல்ல, XUV700 காரின் பாதுகப்பான கட்டமைப்பு குறித்து ஏகப்பட்ட வீடியோக்களை மோட்டார் விகடன் யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

ஓர் புதிய காரை உருவாக்க துவங்கும்போது முதல் விஷயமாகவே, எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கும்போது அது அந்த விபத்தில் இருந்து தப்புவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என பயணிகளின் பாதுகாப்பு விஷயங்களை தான் கார் வடிவமைப்பாளர்கள் மனதில் வைத்திருப்பர். இதனையே இந்த வீடியோவிலும் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

மேலும், தாங்கள் உருவாக்கிய XUV700 கார் மோதல் சோதனையின் போது எந்த அளவிற்கு செயல்படும் என்பதையும் உருவகப்படுத்தி காட்டியுள்ளனர். முன்பக்கம் உள்பட XUV700 காரின் அடிப்படை monocoque முழுவதுமே HSS எனப்படும் அதி-வலிமையான இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

ஆதலால் என்ஜின் பகுதி முழுவதும் நொறுங்கி போகும் அளவிற்கு எதிரே மற்றொரு வாகனம் மோதினால், மோதப்படும்போது கிடைக்கும் சுமையை முறையான முறையில் விநியோகிக்கும். இதன் மூலமாக விபத்தின் போது மோதும் வாகனம் கேபினில் இருக்கும் பயணிகளை நெருங்குவது தவிர்க்கப்பட்டு விபத்தை குறைக்க முடியும் என Mahindra நம்புகிறது.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

இதே யுக்தி தான் காரின் பக்கவாட்டு பகுதிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மோதும் வாகனம் காருக்குள் ஊருடுவதை தவிர்க்கும் உலோகங்கள் side body panel-களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் XUV700 மாடலில் காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

அதுவே கார் பின்பக்கத்தில் மோதலுக்கு உள்ளாகும்போது அது மூன்றாவது இருக்கை வரிசையில் கார் இயங்கும் பாதைக்கு நேராக அல்லது பக்கவாட்டாக அமரும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனையும் கருத்தில் கொண்டு பின்பக்கத்தில் பம்பருக்கு பின்பக்கத்தில் முடிந்த அளவிற்கு எடையை Mahindra வழங்கியுள்ளது.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

இதனால் மோதும் வாகனம் எரிபொருள் டேங்க்கை நெருங்குவது தவிர்க்கப்படும். அதேபோல் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பும் எரிபொருள் டேங்கிற்குள் ஊடுருவாமல் பார்த்து கொள்ளப்பட்டுள்ளது. ஆதலால் பெட்ரோல் டேங்க் வெடித்து வாகனம் தீப்பிடிப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவே.

உலகளாவிய மோதல் சோதனையில் எத்தனை மதிப்பெண்களை பெறும் Mahindra XUV700!! எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது

கார் ஒன்றை முழுவதுமாக உருவகப்படுத்தி பகுப்பாய்வு செய்வதற்கு குறைந்தது ஒன்பது முதல் பத்து மாதங்கள் வரை ஆகும். உருவகப்படுத்துதல் கட்டம் முடிந்தவுடன் காரின் முன்மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டு அதுவும் சோதனை கட்டங்களில் உட்படுத்தப்படும். பிறகு மெய்நிகர் உருவகப்படுத்துதல் சோதனையின் தரவும், உண்மையான முன்மாதிரியின் சோதனையுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பார்க்கப்படும். இதுவே XUV700 காரின் விஷயத்தில் நடைபெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Crash Tested Internally, Expects High NCAP Safety Rating.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X