1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தவர்களில் சிலருக்கு 2023 மார்ச் மாதம் வரையில் டெலிவிரி தேதி கொடுக்கப்பட்டிருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த எஸ்யூவி காரின் சில வேரியண்ட்களின் விலைகளை வெளியிட்ட மஹிந்திரா, அதனை தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி முன்பதிவுகளை துவங்கியது.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

முன்பதிவுகள் துவங்கப்பட்ட வெறும் 3 மணிநேரத்திற்குள் சுமார் 50 ஆயிரம் பேர் எக்ஸ்யூவி700 கார்களை முன்பதிவு செய்து நம்மை ஆச்சிரியப்படுத்தி இருந்தனர். இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மட்டுமல்ல, மொத்த இந்திய ஆட்டோமொபைல் துறைக்கும் புதியது. ஏனெனில் இவ்வளவு விரைவாக இந்தியாவில் எந்த காருக்கும் முன்பதிவு செய்யப்பட்டதுபோல் கேள்விப்பட்டது இல்லை.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

தேவை அதிகமாகினால், முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு அதிகரிப்பது வழக்கம்தானே. இது ஒருபக்கம் இருக்க, மறுப்பக்கம் குறைக்கடத்திகளுக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை வேறு மறுப்பக்கம் மஹிந்திராவை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இதனால் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக காத்திருப்பு கால அளவு 1 வருடத்தை தாண்டுகிறது.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

இவ்வளவு ஏன், முன்பதிவு துவங்கப்பட்ட அக்.7ஆம் தேதி எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தவர்களுக்கு கூட 2022 இரண்டாம் பாதியில் டெலிவிரி தேதி ஒதுக்கி தரப்பட்டுள்ளது. அதன்பின் வெறும் 3 மணிநேரங்களில் 50,000 பேர் குவிந்தது, வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய கால அளவை குறையவிடவில்லை. இந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் உரிமையாளர்களின் மூலம் தற்போது கிடைத்துள்ள தகவல்களில், இப்போது இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்பவர்களுக்கு 2023 மே மாதம் வரையில் டெலிவிரி தேதி ஒதுக்கப்படுகிறதாம்.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

இத்தகைய அதிகப்படியான காத்திருப்பு காலம் நிச்சயமாக இந்த மஹிந்திரா காரை முன்பதிவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை தராது. காரின் நிறம், வேரியண்ட், பாகங்களை பொறுத்து எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலத்தை மஹிந்திரா நிர்ணயிக்கிறது. யார் முதலாவதாக முன்பதிவு செய்கிறார்களோ, அவர்களுக்கு முதலாவதாக கார் டெலிவிரி செய்யப்படும் முறை பின்பற்றப்படுவதில்லை.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

குறைக்கடத்திகளுக்கு உலகளாவிய பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு காரணம் உங்கள் எல்லாருக்கும் நன்றாக தெரிந்ததே, கொரோனா வைரஸ். சீனாவில் 2019இன் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரவலால் முழு ஊரடங்குகள் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தொழிற்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் சிப்-செட்களின் தயாரிப்பு தடைப்பட்டது.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

குறைக்கடத்திகள் ஆட்டோமொபைல் துறைக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளுக்கு தேவைப்படக்கூடியது. இதனால் பல தனியார் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எக்ஸ்யூவி700-இல் குறிப்பாக அதன் டாப் வேரியண்ட்டிற்கு அதிகப்படியான சிப்களின் தேவை உள்ளது. இதனால் தான் எக்ஸ்யூவி700-இன் டாப் வேரியண்ட்டை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லாமல் வழங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் கூட செய்திகள் வெளியாகி இருந்தன.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

ஏனெனில் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கும், அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களுக்கும் தான் அதிகளவில் குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படுவதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் வழங்கப்படும் மற்ற தொழிற்நுட்ப அம்சங்களாக, எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், ஹில் ஹோல்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பெரிய அளவில் பனோராமிக் சன்ரூஃப், ட்ரைவிங் மோட்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

ஏற்கனவே கூறியதுபோல், சுருக்கமாக ADAS எனப்படும் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளை பெறும் எக்ஸ்யூவி700 காரில் இவற்றுடன் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 18-இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், ஓட்டுனர் தூங்குவதை எச்சரிக்கும் அமைப்பு, மஹிந்திராவின் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் அலெக்ஸா முதலியவற்றையும் ஏற்கிறது.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

டாடா ஹெரியர், டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்டவை மட்டுமின்றி, சவாலான விலையினால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு அளவில் சற்று சிறிய ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி அஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவையும் போட்டியாக விளங்குகின்றன.

1.5 வருடம் காத்திருக்க தயார் என்றால், எக்ஸ்யூவி700-ஐ புக் செய்யலாம்!! தயாரிக்க முடியாமல் போராடும் மஹிந்திரா!

இந்த மஹிந்திரா எஸ்யூவி வாகனம் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.19.79 லட்சம் வரையிலான விலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த காருக்கு 25 ஆயிரம் முன்பதிவுகள் கடந்ததை அடுத்து எக்ஸ்யூவி700 மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.12.49 லட்சமாக மஹிந்திரா அதிகரித்தது. எக்ஸ்யூவி700 மட்டுமின்றி, ஆஃப்-ரோடு வாகனமான தாரையும் தேவைக்கு ஏற்ப தயாரிக்க முடியாமல் மஹிந்திரா போராடி வருகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Delivery Timeline.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X