பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

பொலிரோ நியோ மஹிந்திராவின் சமீபத்திய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார். போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் வசதிகள் சற்று குறைவு தான் என்றாலும், மஹிந்திரா பொலிரோவின் முரட்டுத்தனமான இயக்கி பண்புகளை புதிய பொலிரோ நியோ கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இவ்வாறு பொலிரோ நியோவிற்கும், பொலிரோவிற்கும் இடையே சில ஒற்றுமைகளும், அதேநேரம் இரண்டிற்கும் இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்களும் உள்ளன. அவற்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இயக்கத்திறனிலும், பெயரிலும் பொலிரோ கொண்டிருக்கும் இந்த புதிய மஹிந்திரா வாகனம் தோற்றத்தில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள டியூவி300-ஐ ஒத்து காணப்படுகிறது. இதனால் டயர் 2 மற்றும் டயர் 3 நகர வாடிக்கையாளர்களுக்கு பொலிரோ நியோ மிகவும் ஏற்ற வாகனமாகும்.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இன்னும் சொல்லப்போனால் அப்டேட் செய்யப்பட்ட முன்பக்கத்துடனான டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்டிற்கு வைக்கப்பட்ட மறு பெயர் தான் பொலிரோ நியோவாகும். இதன் வருகையால் விற்பனையில் இருந்த டியூவி300 மாடலின் விற்பனையை மஹிந்திரா நிறுத்தியுள்ளது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த வாகனத்தின் பெயரில் பொலிரோவின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு காரணம் அந்த மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு தான். தற்சமயம் மஹிந்திரா பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனம் என்று பார்த்தால் அதில் நிச்சயம் பொலிரோவும் ஒன்றாக உள்ளது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

பொலிரோ நியோ என்4, என்8, என்10 மற்றும் என்10(O) என்ற நான்கு வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்ட் பொலிரோ மாடல் பி4, பி6 மற்றும் பி6(O) என்ற மூன்று வேரியண்ட்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பொலிரோ நியோவிற்கான எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.48 லட்சம் மற்றும் ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இன்னும் இதன் என்10 வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. பொலிரோ மாடலின் விலைகள் ரூ.8.63 லட்சத்தில் இருந்து ரூ.9.61 லட்சம் வரையில் உள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையினை கொண்டுள்ளது போல் தெரியலாம். ஆனால் இன்னும் பொலிரோ நியோவின் என்10 வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

அவற்றை ரூ.11 லட்சம் அளவில் எதிர்பார்க்கிறோம். இதனால் விலையில் பொலிரோ நியோ, பொலிரோவை காட்டிலும் ஒரு படி மேல் உள்ளது. இதற்கு ஏற்ப இந்த புதிய மாடலின் தோற்றம் பொலிரோவை விட பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இரண்டும் ஒரே மாதிரியாக, பெட்டகம் வடிவில் தான் உள்ளன.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இருப்பினும் இரண்டிற்கும் இடையே தோற்ற வித்தியாசத்தை தெளிவாக மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. நீளத்தையும், சக்கர இடையே வீல்பேஸ் நீளத்தையும் இரண்டும் ஒரே மாதிரியாக கொண்டிருந்தாலும், அகலம் மற்றும் உயரத்தில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. அவற்றை வெளிக்காட்டும் அட்டவணை இதோ...

Dimensions Bolero Bolero Neo
Length 3,995 mm 3,995 mm
Width 1,745 mm 1,795 mm
Height 1,880 mm 1,817 mm
Wheelbase 2,680 mm 2,680 mm
பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

உட்புற கேபினின் தோற்றத்தில் புதிய பொலிரோ நியோ, முந்தைய டியூவி300 உடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பொலிரோ நியோவின் கேபினில் ப்ளூடூத் வசதியுடன் 7.0 இன்ச்சில் தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

இதனுடன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பக்கவாட்டு கண்ணாடிகள், முன்பக்க இருக்கைகளில் ஆர்ம்ரெஸ்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் லாக்கிங் உள்ளிட்டவையும் புதிய பொலிரோ நியோவின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

பொலிரோவை போல் பொலிரோ நியோவிலும் 7 பேர் சவுகரியமாக அமரலாம். ஆனால் பொலிரோ நியோவின் கேபின் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மிகவும் மாடர்ன் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் பொலிரோவின் கேபின் மிகவும் சாதாரணமான தோற்றத்திலேயே இப்போதும் காட்சியளிக்கிறது.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

கிட்டத்தட்ட 10 வருடங்களாக விற்பனையில் இருக்கும் பொலிரோவின் கேபினில் வழக்கமான ஆடியோ அமைப்பு, பெரிய அளவில் கவராத டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பவர் ஜன்னல்கள், ரிமோட் லாக்கிங் என சந்தைக்கு பழக்கப்பட்ட வசதிகளே வழங்கப்படுகின்றன.

பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

பொலிரோ மற்றும் பொலிரோ நியோ இரண்டிலும் ஒரே மாதிரியான 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் அமைப்பே மைக்ரோ-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்றன. ஆனால் பொலிரோ நியோவில் வேறுப்பட்ட புவியியல் டர்போவினால் வித்தியாசப்படும் ஆற்றல் வெளியீட்டை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Specs Bolero Bolero Neo
Engine 1.5L, 3-cyl, turbo diesel 1.5L, 3-cyl, turbo diesel
Transmission 5-speed MT 5-speed MT
Power 76hp 100hp
Torque 210Nm 260Nm
பெயரில் மட்டும் தான் இரண்டும் ஒன்றா? மஹிந்திரா பொலிரோ நியோ Vs பொலிரோ!! தெரிந்து கொள்ள வேண்டியவை

நீளமான டீசல் என்ஜின் மற்றும் பின்சக்கர டிரைவிங்கை கொண்ட இந்த பொலிரோ வாகனங்கள் இரண்டும் மஹிந்திராவின் சப்-4 மீட்டர் லேடார்-ஃப்ரேம் சேசிஸில் தான் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொலிரோ நியோ இந்த சேசிஸின் மூன்றாம் தலைமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷனை பொலிரோ நியோ பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero vs Bolero Neo: Differences and similarities explained.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X