Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளிவருகிறது மாருதியின் புதிய கார்!! எலக்ட்ரிக்கா அல்லது ஹைப்ரீட் காரா? முழு விபரம் உள்ளே
மாருதி சுஸுகி புதிய டீசர் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து புதிய கார் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வரும் நாட்களில் வெளிவரவுள்ளது.

அதனை தெரியப்படுத்தும் விதமாகவே தற்போது புதிய டீசர் மாருதியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தில் காரை பற்றிய எந்தவொரு தகவலும் வெளிக்காட்டப்படவில்லை.

வெறுமனே ‘உங்களிடம் அனைத்தையும் நாங்கள் கூறவுள்ளோம், எங்கள் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்ட உத்வேகம்- இணைப்பில் இருங்கள்' என்ற வாக்கியங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த டீசர் படத்தை வைத்து பார்க்கும்போது வெளிவரும் புதிய மாருதி கார் எதிர்காலத்திற்கான தோற்றத்தை கொண்டிருக்கும் என்பது உறுதி. இதனால் இந்த புதிய கார் முழு-எலக்ட்ரிக் அல்லது ஹைப்ரீட் காராக இருக்கலாம். பலேனோவில் மாருதி நிறுவனம் ஹைப்ரீட் என்ஜின் தேர்வை கொண்டுவர திட்டமிட்டிருப்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

ஏனெனில் ஹைப்ரீட் என்ஜின் உடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட பலேனோ காரை பற்றி சமீபத்தில் பார்த்திருந்தோம். பலேனோவின் புதிய மைல்ட்-ஹைப்ரீட் காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எலக்ட்ரிக் மோட்டார்களினால் காரில் ஆக்ஸலரேஷன் மற்றும் டார்க் திறன் வெளிப்பாடு அதிகரிக்கும். இது மாசு உமிழ்வை குறைவாக வெளிப்படுத்தும் வகையில் மட்டுமில்லாமல், அதிக எரிபொருள் திறனையும் காருக்கு வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பலேனோ மைல்ட்-ஹைப்ரீட் அமைப்பை பெறலாம் என்பது ஒரு யூகம்தான். ஏனெனில் வலிமையான ஹைப்ரீட் சிஸ்டமும் அதற்கு மாற்றாக மாருதி நிறுவனம் வழங்கலாம். வலிமையான ஹைப்ரீட் சிஸ்டத்தை புதியதாக வடிவமைக்க வேண்டிய கட்டாயம் மாருதி நிறுவனத்திற்கு இல்லை.

ஏனென்றால் ஏற்கனவே 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்விஃப்ட் ஹைப்ரீட் காரை இந்த நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போது வலிமையான ஹைப்ரீட் அமைப்பில் 10 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டிருந்தது.

இந்த எலக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 13.4 எச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக அந்த சமயத்தில் மாருதி கூறியிருந்தது. பலேனோவில் வழங்கப்படும் புதிய ஹைப்ரீட் தேர்விற்காக இந்த டீசர் வெளியிடப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் அதேநேரத்தில் இந்த புதிய கார் வேகன்ஆர் ஹேட்ச்பேக்கின் முழு-எலக்ட்ரிக் வெர்சனாகவும் இருக்கலாம்.

ஆனால் இதற்கு வாய்ப்புகள் குறைவே. ஏனெனில் சமீபத்தில்தான் வேகன்ஆர் எலக்ட்ரிக் காரின் அறிமுக பணியில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் பின்வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. எக்ஸ்எல்5 என தற்போதைக்கு அழைக்கப்பட்டுவரும் வேகன்ஆரின் முழு-எலக்ட்ரிக் வெர்சன் பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பொருத்தப்படும் சில பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளதால் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை தற்போதைக்கு ஆரம்ப கட்டத்தில்தான் இருப்பதும் மாருதியின் பின்வாங்கலுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.