நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

மாருதி நிறுவனத்தின் பிரபலமான கார் ஒன்று மின்சார காராக மாறியிருக்கின்றது. இக்கார் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

மிக விரைவில் மாருதி சுசுகி நிறுவனம் மின்சார வாகன சந்தையில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த பிரிவில் கால் தடம் பதித்துள்ளன. இந்த நிலையில் சற்று தாமதமாக இப்பிரிவில் கால் தடம் தயாராகி வருகின்றது மாருதி.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சாலையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. போதியளவில் மின்வாகனங்களுக்கான அடிப்படை வசதி இல்லாத காரணத்தினாலேயே இந்நிறுவனம் மின்வாகன அறிமுகத்தைத் தள்ளிப்போட்டு வருவதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று புத்தம் புதிய மாருதி சுசுகி டிசையர் காரை மின்சார வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றது. டிசையரின் விஎக்ஸ்ஐ வேரியண்டை அவர்கள் எலெக்ட்ரிக் காராக மாற்றியமைத்திருக்கின்றனர். இது 2020 பிப்ரவரி மாடல் என கூறப்படுகின்றது.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

இதனையே நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனத்தின் வாயிலாக அதன் உரிமையாளர் மின்சார வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். இவர்கள் இதுவரை செய்த மாற்றியமைக்கும் பணிகளிலேயே மிகவும் முக்கியமான மாடிஃபிகேஷன் வேலையாக இது பார்க்கப்படுகின்றது.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

கார் மாற்றியமைத்தது பற்றிய வீடியோவை ஹேமந்த் தபாதே எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. மேலும், இக்கார் குறித்து டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, மாருதி டிசையர் காரில் 15 kW மின் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கின்றது.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

இந்த மின் மோட்டார் 35 kW வரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதற்கு மின்சார திறனை வழங்குவதற்காக 13 KWh திறனுடைய பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 250கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரி பேக்கின் கிலோவாட் திறனை மேலும் கூட்டிக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

இதன்படி சுமார் 3 KWh வரை உயர்த்திக் கொள்ள முடியுமாம். மின்சார வாகனமாக டிசையர் காரை மாற்றியமைத்திருப்பதால் அதன் எடையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. விற்பனையில் இருக்கும் டிசையர் விஎக்ஸ் வேரியண்ட் 947 கிலோ எடையைக் கொண்டதாக இருக்கின்றது.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

ஆனால், மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கும் டிசையர் 3 கிலோ கூடுதல் எடையைப் பெற்றிருக்கின்றது. இதனால் தற்போதைய எடை 950 கிலோவாக மாறியிருக்கின்றது. மேலும், டாப் ஸ்பீடிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மின்சார வாகனமாக மாறியிருக்கும் டிசையர் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ எனும் செல்லக் கூடிய திறனைப் பெற்றிருக்கின்றது.

நம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா?

இக்கார முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரங்கள் தேவைப்படுமாம். ஆகையால், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய எட்டு மணி நேரங்களை நாம் செலவிட வேண்டியிருக்கும். இக்காரை சார்ஜ் செய்வதற்கான போர்ட் காரின் ப்யூவல் ஃபில்லிங் பகுதியிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த பகுதியிலே சார்ஜிங் கன்னைக்கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இக்காரை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் மாடிஃபிகேஷன் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இதனை அவர்கள் பன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Dzire Modified Into An Battery Car. Read In Tamil.
Story first published: Monday, January 25, 2021, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X