நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

இந்தியாவில் விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையிலான டொயோட்டா ரூமியன் என்ற பெயரிலான எம்பிவி கார் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீபேட்ஜ்டு டொயோட்டா காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

ஜப்பான் நாட்டை சேர்ந்த சுஸுகி மற்றும் டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதன் விளைவாக இந்த இரு நிறுவனங்கள் தங்களது கார் வடிவமைப்பு திட்டங்களை வணிகம் செய்யும் நாட்டிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்கின்றன.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

நம் இந்திய சந்தையில் கூட மாருதி சுஸுகியின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் அடிப்படையிலான டொயோட்டா க்ளான்ஸா ஹேட்ச்பேக் & அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை தொடர்ந்து விரைவில் மாருதி சியாஸின் அடிப்படையிலான டொயோடா பெல்டா செடான் கார் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

இதே பாணியில் தான் தற்போது டொயோட்டா ரூமியன் தென் ஆப்பிரிக்காவில் களமிறக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில் டொயோட்டாவின் இந்த புதிய எம்பிவி மாடலுக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானது என்பது அங்கிருந்த வரும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது டொயோட்டா ரூமியன் இந்த நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூமியன் பெயர் ஒன்றும் டொயோட்டா நிறுவனத்திற்கு புதியது கிடையாது. இதே பெயரில் முன்னர் காலத்தில் காரினை விற்பனை செய்துள்ளது. இந்த பெயரினை தற்போது மீண்டும் சுஸுகி-சார்ந்த காருக்காக டொயோட்டா உயிர்பித்துள்ளது.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

சுஸுகியின் எர்டிகா உலகளவில் பிரபலமான எம்பிவி கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் பல வெளிநாட்டு சந்தைகளில் எர்டிகாவிற்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தியா உள்பட சில நாட்டு சந்தைகளில் எர்டிகா என்ற பெயரிலேயே இந்த சுஸுகி எம்பிவி கார் விற்பனை செய்யப்படுகிறது.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

தற்சமயம் உலகளவில் விற்பனையில் உள்ள தற்போதைய-தலைமுறை எர்டிகா கார் கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தோனிஷியாவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அதே ஆண்டில் இந்திய சந்தையில் புதிய எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட எர்டிகாவிற்கு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு மத்தியில் அப்டேட் வழங்கப்பட்டது.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

இந்தியாவில் சுஸுகியின் உதவியுடன் டொயோட்டா அறிமுகப்படுத்திய க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களில் லோகோவை தவிர்த்து மற்றவை அனைத்தும் சுஸுகி நிறுவனத்துடையது. அதேபோன்று தான் தற்போது தென்னாப்பிரிக்காவில் களமிறக்கப்பட்டுள்ள ரூமியனிலும் பிராண்ட் லோகோவை தவிர்த்து பெரும்பான்மையான பாகங்கள் சுஸுகி எர்டிகாவில் இருந்தே பெறப்பட்டுள்ளது.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

இவ்வளவு ஏன், என்ஜின் அமைப்பில் கூட மாற்றமில்லை. உலகளவில் எர்டிகாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் டொயோட்டா ரூமியனிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 105 எச்பி மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

சுஸுகி எர்டிகாவை போன்று தென் ஆப்பிரிக்காவின் ரூமியனும் 3-வரிசைகளுடன் 8 இருக்கைகளை கொண்ட எம்பிவி காராகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் எர்டிகாவிற்கும், எம்பிவி கார்கள் பிரியர்களை அதிகளவில் கொண்ட இந்தோனிஷிய எர்டிகாவிற்கும் இடையே சில வேறுப்பாடுகள் உள்ளன.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

தற்போது தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரூமியன் எர்டிகாவின் இந்திய வெர்சனை போன்று காட்சியளிக்கிறது. டொயோட்டாவிற்கு சுஸுகி வழங்கவுள்ள மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவையாக தான் இருக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது தற்போது நினைவிற்கு வருகிறது.

நம்ம ஊர் மாருதி எர்டிகா, டொயோட்டா பிராண்டில் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம்!! காரின் பெயர் என்ன தெரியுமா?

மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் டொயோட்டா ரூமியன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அடுத்ததாக இந்த வகையில் டொயோட்டா பெல்டா மாடலே முதலாவதாக விற்பனைக்கு வரவுள்ளது. சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட டொயோட்டா யாரிஸ் செடானின் இடத்தை நிரப்பும் பொருட்டு பெல்டா கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Toyota’s Ertiga-based Rumion revealed in South Africa (Toyota Rumion).
Story first published: Monday, October 11, 2021, 23:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X