Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 15 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெப்சைட்ல வந்தாச்சு, அடுத்து அறிமுகம்! புதுப்பிக்கப்பட்ட 2021 ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவலை வெளியிட்டது மாருதி!!
புதுப்பிக்கப்பட்ட 2021 ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி அதன் அதிகாரப்பூர்வ வளை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வரும் கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரும் ஒன்று. இந்த காரின் 2021 அப்டேடட் வெர்ஷனை தயாரிப்பு நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முன்னதாக இந்நிறுவனம் 2018ம் ஆண்டிலேயே அப்டேடட் ஸ்விஃப் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே புதிய 2021 அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரை நாட்டில் அறிமுகம் ஆயத்தமாகி வருகின்றது மாருதி. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் புதிய ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவல்களல் பட்டியலிடப்பட்டுள்ளன.

எனவே விரைவில் இக்கார் விற்பனைக்கு வந்துவிடும் என இந்திய இளைஞர்கள் மிக உறுதியாக நம்புகின்றனர். புதிய அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரில் என்னனென்ன மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன, என்பது பற்றிய விரிவான தகவல் தெரிய வரவில்லை.

இருப்பினும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவல் மற்றும் புகைப்படத்தின் வாயிலாக சில குறிப்பிட்ட முக்கிய தகவல்கள் மட்டும் தெரிய வந்திருக்கின்றன. 2021 ஸ்விஃப்ட் காரின் வெளி மற்றும் உட்புறத்தில் எக்கசக்க மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அவை அனைத்தும் காரின் கவர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் வெளிப்புறத்தில் கூடுதல் கவர்ச்சி தோற்றத்திற்காக முன்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் க்ரில்லில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஒற்றை லைன் போன்ற அமைப்பு அணிகலன் ஆகும்.

இதுதவிர கருப்பு நிற ரூஃப், புதிய ஸ்டைலிலான அலாய் வீல் உள்ளிட்டவற்றையும் புதிய மாற்றங்களாக தயாரிப்பு நிறுவனம் இக்காரில் புகுத்தியிருக்கின்றது. இதுதவிர வேறெந்த பெரிய மாற்றத்தையும் 2021 ஸ்விஃப்டின் வெளிப்புறத்தில் காண முடியவில்லை. வெளிப்புற தோற்றத்தில் செய்யப்பட்டிருப்பதைப் போலவே காரின் உட்பகுதியிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், காரின் உட்பகுதியில், மனதை கவரும் வகையில் முழுக்க முழுக்க கருப்பு நிறத்திலான பாகங்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய தொழில்நுட்ப வசதி அடங்கிய தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வண்ண மயமான எம்ஐடி, ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், ரிவர்ஸ் பார்கிங் கேமிரா மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவையும் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எஞ்ஜின்:
எஞ்ஜினில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே 2021 ஸ்விஃப்டில் இடம் பெற இருக்கின்றது. இந்த எஞ்ஜின் கே12என் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். இது ஓர் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதிக் கொண்ட எஞ்ஜினும் கூட. இதே திறன் கொண்ட எஞ்ஜினைதான் நிறுவனம் டியர் காரில் பயன்படுத்தி வருகின்றது.

இதில், ஸ்மார்ட் ஹைபிரிட் திறன் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. அறிமுகத்தின்போது இதுகுறித்த தகவல் தெரிய வரும். மேலும், இக்கார் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையிலான விலையுயர்வில் விற்பனைக்குக் கிடைக்கலாம் எனவும் யூகிக்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.