Just In
- 47 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
மாருதி நிறுவனத்தின் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய டீசல் எஞ்சின் விரைவில் மாருதியின் பிரபலமான கார் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்னர் டீசல் கார் விற்பனையை பல நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கூட டீசல் கார் விற்பனைக்கு முழுக்கு போட்டது.
இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் தேர்வுகளை வழங்குகின்றன. டீசல் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தையும் பெற்று வருகின்றன.

இதனையடுத்து, குறிப்பிட்ட கார் மாடல்களில் பிஎஸ்-6 தரத்திலான டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்து கார்களில் பொருத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.

மாருதி நிறுவனம் தனது பிஎஸ்-4 கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளை கொடுத்து வந்தது. இந்த நிலையில், ஃபியட் நிறுவனம் தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவது இல்லை என்று முடிவு செய்தது.

இதையடுத்து, தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி உள்ளது மாருதி சுஸுகி. இந்த புதிய எஞ்சின் விரைவில் எர்டிகா மற்றும் சியாஸ் கார்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. தவிரவும், எஸ் க்ராஸ் மற்றும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களிலும் இந்த எஞ்சின் வழங்கப்படும்.

ஹூண்டாய், கியா கார்களின் டீசல் மாடல்களுக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பு காரணமாகவே, தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது.

மாருதி நிறுவனத்தின் 1.5 லிட்டர் பிஎஸ்4- டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருந்தது. இதன் பிஎஸ்-6 எஞ்சின் மேம்படுத்தப்பட்டாலும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

இந்த எஞ்சின் சியாஸ் காரில் லிட்டருக்கு 26.82 கிமீ மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்து. இதனால், இந்த எஞ்சின் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.