புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி?

புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் டிரேட்மார்க் உரிமையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி சந்தைப் போட்டியை சமாளிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், பல்வேறு வகையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை கார் நிறுவனங்கள் போட்டி போட்டு அறிமுகப்படுத்தி வருகின்றன.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

அந்த வகையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை அறிமுகப்படுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

இதன்படி, S Assist என்ற தொழில்நுட்பத்திற்கு டிரேட்மார்க் பதிவும் செய்துவிட்டது. கடந்த ஆண்டு ஹூண்டாய், கியா கார்களில் அறிமுகம் செய்யப்பட்ட க்ளட்ச் பெடல் இல்லாமல் இயங்கும் மேனுவல் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தையே மாருதி சுஸுகி நிறுவனம் S Assist என்ற பெயரில் தனது கார்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

அதாவது, இந்த எஸ் அசிஸ்ட் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தில் லிவர் மூலமாக கியரை மேனுவலாக மாற்றலாம். ஆனால், க்ளட்ச் பெடலுக்கு பதிலாக தானியங்கி முறையில் க்ளட்ச் செயல்படும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும். இதனால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்று ஆசுவாசமான ஓட்டுதல் அனுபவத்துடன் மேனுவல் காரை ஓட்டும் அனுபவத்தை ஓட்டுனர் பெற முடியும்.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

இந்த புதிய வகை ஆட்டோமேட்டிக் கார் மேனுவல் காரை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருப்பதுடன், க்ளட்ச் பெடலை மிதித்து கியர் மாற்றும் அவசியத்தை குறைப்பதால், நகர்ப்புறத்திலும், நெடுஞ்சாலையிலும் ஓட்டுனர் சீக்கிரமாக சோர்ந்து போவதை தவிர்க்க முடியும்.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

இந்த புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களின் மைலேஜ் கூட மேனுவல் கார்களுக்கு இணையாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும். எரிபொருளுக்கு கூடுதல் செலவு வைக்காது என்றும் தெரிகிறது.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களில் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை ஏற்கனவே வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த புதுமையான கியர்பாக்ஸ் தேர்வும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு டிரேட்மார்க் வாங்கியது மாருதி சுஸுகி!

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, வேகன் ஆர், விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களில் இந்த புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை முதல்கட்டமாக மாருதி சுஸுகி வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has trademarked the S-Assist name in the Indian market. This could be the new automatic gearbox offering from the brand in the Indian market. Apart from the name, no other details have been revealed of the S-Assist technology.
Story first published: Thursday, June 3, 2021, 14:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X