2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

புதிய மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம். ம் செய்தது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி மிக சமீபத்தில் அதன் புதிய ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை ரூ.5.73 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

அதனை தொடர்ந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் கார்கள் வெவ்வேறான நிறங்கள் மற்றும் வேரியண்ட்களில் அனைத்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த காரினை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் நாடு முழுவதும் ஆங்காங்கே துவங்கப்பட்டுள்ளன.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

இது தொடர்பான படம் ஹிந்துஸ்தான் ஆட்டோ செய்திதளம் வெளியிட்டுள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களாக சில மாற்றங்களை ஏற்றுள்ள 2021 ஸ்விஃப்ட் காரின் முன்பக்கத்தில் புதிய க்ராஸ் மெஷ் க்ரில் அமைப்பு அதனை இரண்டாக பிரிக்கும் க்ரோம் ஸ்ட்ரிப் உடன் வழங்கப்பட்டுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

இந்த கூடுதல் சேர்ப்புகளினால் மாருதி ஸ்விஃப்ட் முன்பை காட்டிலும் ஸ்போர்டியரான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ+ இரட்டை-நிறம் என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

இந்த 2021 மாருதி ஹேட்ச்பேக் காருக்கு மிட்நைட் கருப்பு நிற கூரையுடன் முத்து ஆர்க்டிக் வெள்ளை, முத்து ஆர்க்டிக் வெள்ளை நிற கூரையுடன் முத்தின் உலோக மிட்நைட் நீலம் மற்றும் மிட்நைட் கருப்பு நிற கூரையுடன் நெருப்பின் சிவப்பு என்ற இரட்டை-நிற தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

அதேநேரம் கார் மெட்டாலிக் லூசண்ட் ஆரஞ்சு, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மேக்மா கிரே, சாலிட் ஃபயர் ரெட், முத்து மெட்டாலிக் மிட்நைட் ப்ளூ மற்றும் முத்தின் ஆர்க்டிக் வெள்ளை என்ற ஒற்றை-நிற தேர்வுகளிலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

உட்புறத்தில் புதிய ஸ்விஃப்ட் காரில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், என்ஜினின் இயக்கத்தை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்வதற்கு பொத்தான், சாவி இல்லா நுழைவு, கண்ட்ரோல் பொத்தான் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

இவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல், வண்ண நிறங்களில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தன்னிச்சையாக மடிந்து கொள்ளக்கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் போன்ற வசதிகளையும் புதியதாக 2021 ஸ்விஃப்ட் பெற்றுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

அதேநேரம் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஆற்றல்மிக்க 1.2 லிட்டர் ட்யுல்-ஜெட் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் கே12என் என்ஜினையும் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது. மாருதி டிசைர் காம்பெக்ட் செடானில் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! டெலிவிரி பணிகள் ஆரம்பமாகின...

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படும் இந்த ட்யுல்-ஜெட் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் 23.20kmpl மைலேஜ்ஜையும், ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் சற்று கூடுதலாக 23.76kmpl மைலேஜ்ஜையும் வழங்கக்கூடியது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Maruti Swift facelift deliveries start in India
Story first published: Saturday, February 27, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X