2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

2021 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் அதன் ஸ்டைலிஷான தோற்றத்தினாலும், வழங்கப்படும் கண்ணை கவரும் நிறத்தேர்வுகளினாலும் கடந்த பல ஆண்டுகளுக்காக சாலையில் செல்லும்போது பலரை திரும்ப வைக்கும் காராக விளங்கி வருகிறது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

இது போதாதென்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்சமயம் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு கூடுதல் ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

இந்த ஆக்ஸஸரீகள் மூலம் ஸ்விஃப்ட்டின் வெளிப்புறத்தின் சில பகுதிகளை வ்ராப்-ஆல் மூடியும், கிராஃபிக் டிசைன்களையும் பெறலாம். இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளில் முன்பக்க, பக்கவாட்டு மற்றும் பின்பக்க அடிப்பக்கத்திற்கான ஸ்பாய்லரும் அடங்குகின்றன. இந்த ஸ்பாய்லர்கள் காரின் எட்டு நிறங்களிலும் கிடைக்கும்.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

க்ரோம் அழகு வேலைப்பாடுகள் பொதுவாகவே இந்தியர்கள் விரும்பக்கூடியவை ஆகும். ஆனால் ஸ்விஃப்ட்டின் மூடுப்பனி விளக்குகள், முன்பக்க பம்பர், க்ரில், பின்பக்க கதவு மற்றும் டெயில்லேம்ப்களில் கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்படும் க்ரோம் கார்னிஷால் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

ஏனெனில் மாருதி ஸ்விஃப்ட் அதன் ஸ்டைலையும், ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகளையும், ஸ்போர்டியான ஹேண்ட்லிங்கையுமே பெரும்பான்மையாக சார்ந்துள்ளது. க்ரோம் துண்டுகள் இந்த ஹேட்ச்பேக் காரை சுற்றிலும் அவ்வளவாக வழங்கப்படுவதில்லை.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

இருப்பினும் ஸ்விஃப்ட்டின் தோற்றத்தை மெருக்கேற்றும் வகையில் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படுகின்ற கதவு விஸர்கள், பக்கவாட்டு மோல்டிங் மற்றும் பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கான கவர்கள் உடன் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்கலாம்.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

ஸ்விஃப்ட்டின் விலை குறைவான வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் தங்களது காரின் சக்கர மூடிகளை மிட்நைட் கருப்பு அல்லது நெருப்பின் சிவப்பு நிறத்தில் வாங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது? ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன

ரூ.5.73 லட்சத்தில் இருந்து ரூ.8.41 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலைகளை கொண்டுள்ள ஸ்விஃப்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளின் விலைகள் குறைந்தப்பட்சமாக ரூ.150-ல் (முன்பக்க மட்ஃப்ளாப்) இருந்து அதிகப்பட்சமாக ரூ.25,160 வரையில் (சில்வர் நிறத்தில் நான்கு எண்ணிக்கைகளில் அலாய் சக்கரங்கள்) உள்ளன. கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

Most Read Articles

English summary
2021 Maruti Suzuki Swift accessories detailed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X