2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

மாருதி சுஸுகியின் சமீபத்திய அறிமுகமான 2021 ஸ்விஃப்ட் சற்று திருத்தியமைக்கப்பட்ட தோற்றத்துடன் புதிய என்ஜினை பெற்றுவந்தது. குறிப்பாக காரின் முன்பகுதி பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

புதிய ஸ்விஃப்ட்டிற்கு சில டீலர்ஷிப்கள் கவர்ச்சிக்கரமான ஆக்ஸஸரீ தேர்வுகளை வழங்குகின்றன. இந்த வகையில் லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பை பெற்ற 2021 ஸ்விஃப்ட்டின் விலை குறைவான எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

Image Courtesy: AutoTrend TV

ஆட்டோ ட்ரெண்ட் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் ஸ்விஃப்ட் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டின் முன்பக்கம் ஹலோஜன் ஹெட்லேம்ப்களை மட்டும் கொண்டுள்ளது, ஃபாக் விளக்குகள் இல்லை.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

பக்கவாட்டில் கருப்பு நிற கதவு கைப்பிடிகள், கருப்பு நிறத்தில் காரின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணாடிகள் மற்றும் இரும்பு சக்கரங்களை பார்க்க முடிகிறது. ஆனால் இந்த கார் டீலர்களால் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதால், சக்கரங்கள் கருப்பு நிற மேல் மூடிகளை பெற்றுள்ளன.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

அதேபோல் அனைத்து ஜன்னல் கண்ணாடிகளின் மேற்புறத்திலும் மழை தண்ணீர் தடுப்பு கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். மற்றப்படி எல்இடி டெயில்லேம்ப்களை கொண்ட பின்பக்கத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

உட்புற தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டெனா மேற்கூரையில் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆக்ஸஸரீ தொகுப்பினால் இந்த ஸ்விஃப்ட்டின் அனைத்து ஜன்னல் கண்ணாடிகளும் தொடுத்திரை மூலமான கண்ட்ரோலுக்கு உட்படுகின்றன.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

இந்த காரின் ஸ்டேரிங் சக்கரம் எந்தவொரு கண்ட்ரோல் பொத்தான்களையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் இது விலை குறைவான ஸ்விஃப்ட் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டாகும். மேலும் இதனால் இந்த காரில் பல தரப்பட்ட தகவல்களை ஓட்டுனருக்கு வழங்கும் திரை மற்றும் டெச்சோமீட்டரையும் இழந்துள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் மிகவும் அடிப்படை தரத்திலேயே காட்சியளிக்கிறது. டீலர்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பியோனீர் நிறுவனத்துடையது ஆகும்.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

6 இன்ச் திரை உடன் உள்ள இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் நான்கு ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சிஸ்டத்தின் மூலம் ஏஎம், எஃப்.எம், யுஎஸ்பி, அக்ஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்புகளை பெற முடியும்.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

ஏசி மேனுவலாக கண்ட்ரோல் செய்யக்கூடியதாக உள்ளது. உட்புறத்தில் வழங்கப்படும் பின்புறத்தை காட்டும் கண்ணாடி இந்த ஸ்விஃப்ட் காரில் இல்லை. செண்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் டீலர்களால் பொருத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்ப பெரிமெட்ரிக் அலாரம் சிஸ்டத்திற்கான பொத்தானும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய தலையணை முன் இருக்கைகளில் வழங்கப்படவில்லை. ஸ்விஃப்ட்டின் விலை குறைவான வேரியண்ட்களிலும் இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், என்ஜின் இம்பொளிசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.

2021 மாருதி ஸ்விஃப்ட் காரை இப்படிப்பட்ட தோற்றத்திலும் பெறலாம்!! விவரிக்கும் வீடியோ இதோ...

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மொத்த ஆக்ஸஸரீகளின் மதிப்பு ரூ.41,664 ஆகும். ஆனால் இவற்றை லிமிடெட் எடிசன் பேக்கேஜ் என்ற பெயரில் ரூ.35,940 இல் வாங்கலாம். இந்த பேக்கேஜில் கேபினிற்கான தரை பாய்களும் அடங்குகின்றன.

Most Read Articles

English summary
2021 Maruti Swift base trim with Limited Edition kit looks classy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X