240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

240கிமீ ரேஞ்சில் இயங்கக்கூடிய வகையில் மாருதி சுஸுகி டிசைர் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைக்கு அதன் காம்பெக்ட் செடான் காரான டிசைரின் எலக்ட்ரிக் வெர்சனை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை. ஆனால் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தால் டிசைர் கார் ஒன்று எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 240கிமீ ஆகும். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 1 மணிநேரமே போதுமாம். இந்த எண்கள் உண்மையில் நம்மை ஆச்சிரியப்படுத்துகின்றன. இந்த எலக்ட்ரிக் டிசைர் காரில் வழக்கமான என்ஜினிற்கு மாற்றாக 20kWh பேட்டரி உடன் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

இந்த பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்பி கொண்டு அதிகப்பட்சமாக 240கிமீ தூரத்திற்கு பயணிக்க முடியும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டும் இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 160kmph ஆகும்.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

வழக்கமான வீட்டு மின்சாரத்தின் மூலமாக, கச்சிதமாக பொருந்தக்கூடிய விரைவு சார்ஜர் உடன் இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 8 மணிநேரங்கள் தேவைப்படுமாம். செயல்திறனை அதிகரிக்க காரில் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்கை நார்த்வே மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

இவை தவிர்த்து காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்த எந்த விபரத்தையும் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிடவில்லை. ஏனெனில் இந்த எலக்ட்ரிக் காரின் காப்புரிமை செயல்பாடுகள் இன்னமும் சென்று கொண்டிருக்கின்றன.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

மற்ற இவி நிறுவனங்களை இல்லாமல் கண்ட்ரோலர் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என கிட்டத்தட்ட இந்த காரில் புதியதாக வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

90ஆம் காலக்கட்டங்களில் பிரபலமான எல்பிஜி மாற்று தொகுப்பை போன்று இந்த டிசைர் காரில் பயன்படுத்தப்ப்பட்டுள்ள இவி மாற்று தொகுப்புகள் வரும் காலங்களில் பிரபலமடையலாம். இந்த எலக்ட்ரிக் வாகனம் ஆட்டோமோட்டிவ் தொழில் தரநிலைகளின் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

எலக்ட்ரிக் வாகனமாகவே உருவாக்கப்படும் கார்களை காட்டிலும் இவ்வாறு எலக்ட்ரிக் மாற்று தொகுப்பின் மூலமாக தான் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு பொது மக்களிடையே அதிகரிக்கும் என நினைக்கிறோம்.

240கிமீ ரேஞ்ச் உடன் மாருதி சுஸுகி டிசைர் இவி!! 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாம்...

இதற்கு மாருதி சுஸுகியின் மிக பிரபலமான ஸ்விஃப்ட் டிசைர் கார் மாடலை இவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது உண்மையில் சரியான முடிவே. ஏனெனில் இவ்வாறான மலிவான கார்களின் மூலமாக தான் எலக்ட்ரிக் வாகனங்களை மக்களிடம் விரைவாக கொண்டு செல்ல முடியும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Dzire EV Conversion Kit Revealed: 240Km Range & 1-Hour Fast-Charging Capability
Story first published: Tuesday, April 27, 2021, 1:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X