ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சின் தேர்வில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வந்துள்ளது.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதுப்பொலிவு

கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் பொலிவு கூட்டப்பட்ட மாடலாக இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த காரின் முன்புற க்ரில் அமைப்பில் தேன்கூடு பின்னல் வலை அமைப்பு மற்றும் க்ரோம் பட்டையுடன் புதிய பொலிவு கண்டுள்ளது.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

டியூவல் டோன் பெயிண்ட்

தற்போது புதிய ஸ்விஃப்ட் காரில் இரட்டை வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். கருப்பு வண்ண கூரையுடன் பியர்ல் ஆர்டிக் ஒயிட் மற்றும் சாலிட் ஃபயர் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளும், வெள்ளை வண்ண கூரையுடன் மிட்நைட் புளூ வண்ணத் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

இன்டீரியர்

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், பல கூடுதல் வசதிகளை பெற்றிருக்கிறது. மேலும், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, கீ லெஸ் என்ட்ரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ அப்ளிகேஷன் மூலமாக நிகழ்நேர முறையில் போக்குவரத்து நிலவரம் குறித்த தகவல்களையும் பெற முடியும்.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

மேம்படுத்தப்பட்ட ஆடியோ சிஸ்டம்

விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் புதிய ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வால்யூம் கன்ட்ரோல் மற்றும் பாடல்களை மாற்றுவதற்கான டிராக் சேஞ்ச் போன்வற்றை தொடு உணர் பொத்தான்கள் மூலமாக மாற்ற முடியும். புளூடூத், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட் ஆகியவையும் தக்க வைக்கப்பட்டுள்ளன.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

புதிய பெட்ரோல் எஞ்சின்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் முக்கிய அம்சமாக புதிய 1.2 லிட்டர் டியூவல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இல்லை

இந்த காரில் ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்ப வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. மாருதி பலேனோ காரில் வழங்கப்படும் இதே பெட்ரோல் எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், புதிய ஸ்விஃப்ட் காரில் மைல்டு ஹைப்ரிட் கொடுக்கப்படவில்லை.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

மைலேஜ்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 23.20 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் 23.76 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்று தெரிவிக்கிறது.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் ஏஎம்டி மாடலில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு வசதிகள் உள்ளன. ஸ்டீயரிங் வீல் இயல்பு நிலைக்கு வருவதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிரேக் சிஸ்டத்துடன் வந்துள்ளது.

ரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்

விலை விபரம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ரூ.5.73 லட்சம் முதல் ரூ.7.91 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஏஎம்டி மாடலானது ரூ.6.86 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
--

English summary
Maruti Suzuki has launched Swift facelift with additional features and new petrol engine option in India.
Story first published: Wednesday, February 24, 2021, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X