அறிமுகமாகி 15ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி கார்... இதுவே 2020ல் சிறந்த விற்பனையான கார்!!

2020 இல் சிறந்த விற்பனையான கார் எது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

நாட்டின் ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனங்களில் மாருதி சுசுகி-யும் ஒன்று. இந்நிறுவனம் விற்பனைச் செய்து வரும் பிரபலமான கார்களில் ஸ்விஃப்ட் மாடலும் ஒன்று. இது ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த காரே 2020-இன் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச் கார் என்ற பெறுமையை தற்போது பெற்றிருக்கின்றது.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

அதாவது, 2020ம் ஆண்டில் நாட்டிலேயே அதிகம் விற்பனையான கார் என்ற பெறுமையை இது சூடியிருக்கின்றது. மிக ஸ்டைலான தோற்றம், சூப்பர் திறன் கொண்ட எஞ்ஜின், அனைத்து வயதினரையும் ஈர்க்கக்கூடிய சிறப்பு வசதிகள் என அனைத்திலும் இக்கார் உச்சத்தில் இருக்கின்றது. எனவேதான், இந்த கார் கடந்த ஆண்டில் அதிக விற்பனையைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

இந்தியாவின் கார் ஆஃப் தி இயர் எனும் விருதை தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற காரும் இதுவே ஆகும். இந்த நிலையிலேயே அதிகம் விற்பனையாகும் காராக 2020ல் இது உருவெடுத்திருக்கின்றது. 2016ம் ஆண்டில் 15 லட்சம் யூனிட்டுகளாக மட்டுமே இருந்த இதன் விற்பனை 2020-இல் 23 லட்சம் யூனிட்டுகள் என்ற புதிய இலக்கை எட்டியிருக்கின்றது. இதனடிப்படையிலேயே நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பட்டத்தை ஸ்விஃப்ட் பெற்றிருக்கின்றது.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

இக்காரை வாங்குவோர்களில் 53 சதவீதம் 35 வயதிற்கும் குறைவானர்களே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெறும் காராகவும் இது இருக்கின்றது. இக்காரை மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி 15 ஆண்டுகள் ஆகின்றன. அண்மையில் இதனை முன்னிட்டு ஆண்டு விழாவை நிறுவனம் கொண்டாடியது.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

அதேசமயம், 15 ஆண்டுகளாக இக்கார் சந்தையில் இருக்கின்றபோதிலும் மவுசு குறையாமல் நல்ல வரேவற்பை இந்தியாவில் பெற்று வருகின்றது. இதற்கு கிடைத்து வரும் வரவேற்பைக் கண்டு ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையுமே தற்போது ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றன.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பது மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் காராகும். இதில் 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் எஞ்ஜினையே மாருதி பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடியது.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

தொடர்ந்து, 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியார்பாக்ஸ் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் அதிகபட்ச மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 21.21 கிமீ ஆகும். இது அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ மைலேஜ் தகவல் ஆகும்.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் புதிய விற்பனை மைல்கல்லை எட்டியது பற்றி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, "மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கடந்த 15 ஆண்டுகளாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கின்றது. தற்போது வரை 2.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இக்காரை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.

2020ல் சிறந்த விற்பனையான கார் எது தெரியுமா? அறிமுகமாகி 15 ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி தயாரிப்பு!

கோவிட்-19 வைரசின் தாக்கம் மோசமாக இருந்தபோதிலும் 2020 வருடத்தில் ஸ்விஃப்ட் 1,60,700 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையைப் பெற்றது. இந்த சிறப்பான வரவேற்பை வழங்கியமைக்காக வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். தொடர்ச்சியான வாடிக்கையாளர் ஆதரவுடன் ஸ்விஃப்ட் எதிர்காலத்தில் இன்னும் பல மைல்கல்லை வெற்றிகரமாக எட்டும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

Most Read Articles

English summary
Maruti Suzuki Swift Is The Best Selling Car In The Calendar Year 2020. Read In Tamil.
Story first published: Saturday, January 23, 2021, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X