மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்ட மாருதி ஸ்விஃப்ட் கார் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் அறிமுக விபரம் மற்றும் மாற்றங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி ஸ்விஃப்ட் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், இதன் டிசைன், எஞ்சின், சிறப்பம்சங்கள், விலை ஆகியவை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு நிறைவான மதிப்பை கொடுத்து வருவதால், தொடர்ந்து விற்பனையிலும் அசத்தி வருகிறது.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்த நிலையில், மாருதி ஸ்விஃப்ட் காரின் மதிப்பை தக்க வைக்கும் விதத்தில், சில மாற்றங்களுடன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மட்டுமின்றி, கூடுதல் திறன் வாய்ந்ததாக மாற்றப்பட்ட பெட்ரோல் எஞ்சினுடன் வர இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் தற்போது இடம்பெற்றிருக்கும் 1.2 லிட்டர் கே12எம் எஞ்சின் அதிகபட்சமாக 83 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த எஞ்சினுக்கு பதிலாக புதிய கே12என் டியூவல்ஜெட் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்த புதிய எஞ்சின் மற்றும் ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்ப வசதியுடன் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், அதிக திறனை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, புதிய பெட்ரோல் எஞ்சின் 90 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

தற்போது வழங்கப்படும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடர்ந்து தக்க வைக்கப்படும். இதனால், மாருதி ஸ்விஃப்ட் காரின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

உட்புறத்தில் வடிவமைப்பு மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும். முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் தக்க வைக்கப்படுவதுடன், மல்டி கலர் திரையுடன் எம்ஐடி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் முன்புற க்ரில் அமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். அத்துடன், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 15 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், ரியர் வியூ கேமரா, கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

திய மாருதி ஸ்விஃப்ட் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேரியண்ட்டிற்கு தக்கவாறு ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலையில் இந்த மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் துவக்கத்தில் இருந்து டெலிவிரிப் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

Via- ACI

Most Read Articles

English summary
Maruti is likely to launch new Swift facelift model in India by next month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X