Just In
- 38 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
மாருதியின் அடுத்த அறிமுக மாடலான எக்ஸ்எல்5 புதிய அலாய் சக்கரங்களுடன் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி எக்ஸ்எல்5 இந்த 2021ஆம் வருடத்தில் அறிமுகமாகவுள்ளது. வேகன்ஆரின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த கார் எக்ஸ்எல்5 என்ற பெயரில்தான் அறிமுகமாகவுள்ளதா என்பதை அறிய இன்னும் சில காலம் நாம் காத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த புதிய மாருதி கார் நெக்ஸா அவுட்லெட்டின் மூலமாகவே விற்பனை செய்யப்படும் என்பது மட்டும் உறுதி. நெக்ஸா மாருதியின் ப்ரீமியம் கார் விற்பனை டீலர்ஷிப் மையமாக விளங்குகிறது. ஆனால் எக்ஸ்எல்5 மலிவான காராகவே வெளிவரும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் எக்ஸ்எல்5-இன் சோதனை மாதிரி ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தின்போது மோட்டோரோக்டேன் செய்திதளத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தோற்றத்தில் இந்த எலக்ட்ரிக் கார் மாருதி வேகன்ஆரையே பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

ஆனால் வேகன்ஆரில் இருந்து வித்தியாசப்படுவதற்காக புதிய வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள், வித்தியாசமான முத்திரை, க்ரோம் க்ரில் மற்றும் ரீடிசைனில் பம்பர்கள் உள்ளிட்டவற்றை இந்த கார் பெற்று வந்துள்ளதை இந்த படங்கள் மறைப்புகளுடன் வெளிக்காட்டுகின்றன.

ஆனால் அலாய் சக்கரங்களின் டிசைன் முற்றிலும் மாறுப்பட்டுள்ளதை இந்த படங்கள் எந்த மறைப்பும் இன்றி வெளிக்காட்டுகின்றன. இவ்வாறான அலாய் சக்கரங்களை ஐரோப்பிய கார்களில் பார்க்க முடியும். சாடினில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இந்த அலாய் சக்கரங்கள் உண்மையில் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளன.

அதேபோல் புதிய நெக்ஸா நிறங்களையும் எக்ஸ்எல்5 பெற்றுவருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் இருந்து காரின் உட்புற ஸ்பை படங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த காரின் கேபின் கருப்பு நிறத்தில் தற்சமயம் விற்பனையில் உள்ள எக்ஸ்எல்6-ஐ போன்று க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளை பெற்றுவரலாம்.

ஆனால் காரின் உட்பக்கம் வேகன்ஆரைதான் பெரிதும் ஒத்து காணப்படும். மாருதியின் சமீபத்திய புதிய தயாரிப்புகள் அனைத்தின் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்பட்ட அதே ஹெர்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில்தான் எக்ஸ்எல்5 காரும் வெளிவரவுள்ளது.

இதனால் மாருதியின் இந்த புதிய தயாரிப்பில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டரில் பெட்ரோல் என்ஜின்களை எதிர்பார்க்கலாம். இவற்றுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படலாம். எக்ஸ்எல்6-ஐ போன்று இரண்டு அல்லது மூன்று வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. விலை வேகன்ஆரை காட்டிலும் ரூ.70,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.