ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

மஸராட்டி கிப்லி கார் இந்தியாவில் ரூ.1.15 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மஸாராட்டி காரை பற்றிய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கவனிக்கத்தக்க வகையிலான அப்டேட்களை பெற்றுவரும் இந்த மஸாராட்டி கார் வழக்கமான 3.0 லிட்டர் வி6 மற்றும் வி8 பெட்ரோல் என்ஜின்களுடன் புதிய 4-சிலிண்டர் 2.0 லிட்டர் என்ஜின் 48 வோல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் ஏற்றுள்ளது.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

கிப்லி ஹைப்ரீட் கார் கிப்லியின் டீசல் வேரியண்ட்களை காட்டிலும் சற்று கூடுதல் விரைவானது. 100kmph வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடும் கிப்லி ஹைப்ரீட் காரின் அதிகப்பட்ச வேகம் 255kmph ஆகும்.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

எக்ஸாஸ்ட்டின் உறுமும் சத்தத்திற்காக ஒத்ததிர்வுகள் பிரத்யேகமாக இதன் ஹைப்ரீட் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட ஆற்றல்கள் மீண்டும் என்ஜினிற்கு கிடைப்பதை ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டம் உறுதி செய்கிறது.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

மஸாராட்டி கிப்லி ஹைப்ரீட் காரை அதிகப்பட்சமாக 330 எச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும். 2021 மஸராட்டி கிப்லி காரில் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பாக ஹெட்லைட் அமைப்பில் 15 எல்இடி பல்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

இவை 15-தும் சேர்ந்து வழக்கமான ஹெட்லைட்களை காட்டிலும் 200 சதவீதம் சிறப்பான ஒளியினை வெளிப்படுத்தக்கூடியவை. உட்புறத்தில் 16:10 விகிதத்துடன் பெரிய 10.1 இன்ச் திரைக்கு பதிலாக 8.4 இன்ச்சில் திரை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

ப்ரீமியம் உணர்விற்காக இந்த திரை ஃப்ரேம் இல்லாததுபோல் காட்சியளிக்கிறது. அதேபோல் 7-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் பெரிய என்ஜின் வேகத்தை அளவிடுவான் மற்றும் வேகமானி உடன் சிறிது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.15 கோடியில் 2021 மஸராட்டி கிப்லி!! ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜின் உடன்...

வாகனத்தின் நிலையை தொடர்ந்து ஓட்டுனர் கண்காணிக்க இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் யூனிட் மஸராட்டி கனெக்டட் ப்ரோகிராமிற்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ளது. காரின் நிலை குறித்த தகவல்களை உரிமையாளர் தனது ஸ்மார்ட்போன் வழியாகவும் அறியலாம்.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati Ghibli 2021 launched at ₹1.15 cr, gets 2.0 l hybrid engine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X