இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

மஸேரட்டியின் முதல் இந்திய ஹைப்ரீட் எஸ்யூவி காராக லெவண்டே ஹைப்ரீட் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஹைப்ரீட் மஸேரட்டி காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

இத்தாலிய லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மஸேரட்டி, பகுதி மின்மயமாக்கல் மற்றும் ஹைப்ரீட் அமைப்புடன் உருவாக்கியுள்ள இரண்டாவது வாகனம் லெவண்டே ஹைப்ரீட் ஆகும். இதற்கு முன்னர் மஸேரட்டி கிப்லி ஹைப்ரீட் கார் தயாரிக்கப்பட்டு இருந்தது.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

தோற்றத்தை பொறுத்தவரையில், மஸேரட்டி லெவண்டே பக்கா இத்தாலியன் கார் என்பதால் நிச்சயம் மற்ற கார்களில் இருந்து தனித்து தெரியும். வாகனம் மிகவும் பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் பார்ப்போரை வசீகரிக்கும் வகையில் இருக்கும்.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

மஸேரட்டி லெவண்டே ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இதன் ஹைப்ரீட் வெர்சன் தற்போதுதான் புதியதாக விற்பனைக்கு வருகிறது. ஹைப்ரீட் என்பதால், மஸேரட்டி வடிவமைப்பாளர்கள் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வித்தியாசப்படுவதற்காக வெளிப்புறத்தில் சில நீல நிற தொடுதல்களை வழங்கியுள்ளனர்.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

லெவண்டே ஹைப்ரீட் காரில் ரீடிசைனில் ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள், க்ரில் மற்றும் 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை போதாது என்போர்க்கு, இந்த மைல்ட்-ஹைப்ரீட் காரில் ‘அஸுரோ அஸ்ட்ரா' என்ற பிரத்யேக பெயிண்ட் தேர்வு வழங்கப்பட உள்ளது.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

வெளிப்புற நீல நிற தொடுதல்கள் உட்புறத்திற்கும் தொடரப்பட்டுள்ளன. பெரிய 8.4 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பல-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றுடன் மஸேரட்டி லெவண்டேவின் உட்புறம் இன்னமும் பழைய கார்களை போலவே தொடரப்படுவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

அதற்காக பழமையான அனலாக் டயல்களை எதிர்பார்க்க வேண்டாம், முழு டிஜிட்டல் திரை வழங்கப்படுகிறது. லெவண்டே ஹைப்ரீட் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் 330 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியது.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

ஆனால் புதிய ஹைப்ரீட்-என்ஜின் அமைப்பால் இந்த காரில் கூடுதல் ஆற்றல் கிடைக்கும். மஸேரட்டி, ரேசிங் கார்களை தயாரிப்பதில் பிரபலமானது. இதனால் அதற்கேற்ப கார்களை வடிவமைப்பதில் இந்த நிறுவனத்தின் பொறியியலாளர்கள் கைத்தேர்ந்தவர்கள்.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

லெவண்டே ஹைப்ரீடிலும், சிறந்த எடை வழங்கலுக்காக பேட்டரி காரின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செயல்திறனில் இந்த ஹைப்ரீட் எஸ்யூவி கார் 100kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.

இந்தியா வர தயாராகிறது மஸேரட்டியின் முதல் ஹைப்ரீட் எஸ்யூவி கார், லெவண்டே ஹைப்ரீட்!!

இதன் மின்னணு வரையறுக்கப்பட்ட அதிகப்பட்ச வேகம் 240kmph ஆகும். அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் லெவண்டே ஹைப்ரீட் காருக்கு விற்பனையில் போர்ஷே கேயனே, பிஎம்டபிள்யூ எக்ஸ்7, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் ஆடி க்யூ7 உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati has planned to launch the hybrid version of their first-ever SUV, the Levante in India. The Italian brand is planning to launch the Levante Hybrid by the end of this year.
Story first published: Sunday, July 11, 2021, 22:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X