அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கியது மஸராட்டி! விலைகூட இன்னும் வெளியிடல!

அடுத்த வருடம் டெலிவரி செய்யப்பட இருக்கும் காருக்கு மஸராட்டி நிறுவனம் இப்போதே முன்பதிவை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே பார்க்கலாம், வாங்க.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

உலக புகழ்பெற்ற சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான மஸராட்டி, அடுத்த வருடம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே இந்தியாவில் முன்பதிவை (புக்கிங்) தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்சி20 எனும் புதுமுக காருக்கான புக்கிங்கையே நிறுவனம் தற்போது நாட்டில் தொடங்கியிருக்கின்றது.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

இது ஓர் மிட் எஞ்ஜின் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக காராகும். இந்த சூப்பர் காருக்கே தற்போது இந்தியாவில் புக்கிங்கை தொடங்கியிருக்கின்றது மஸராட்டி. இதனை வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் டெலிவரி கொடுக்க இருப்பதாக மஸராட்டி அறிவித்திருக்கின்றது.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

ஆமாங்க, இன்னும் ஏழு மாதங்கள் இடையில் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் மஸராட்டி கிப்லி, லெவண்டோ மற்றும் குவாட்ரபோர்டே ஆகிய மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இதன் வரிசையில் புதிதாக எம்சி20 ஸ்போர்ட்ஸ்காரும் இணைய இருக்கின்றது.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

எம்சி20 ஸ்போர்ட்ஸ் காரில் 3.0 லிட்டர் வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தனது தாய் நாடான இத்தாலியில் உள்ள உற்பத்தி ஆலையிலேயே வைத்து தயாரித்திருக்கின்றது மஸராட்டி. வி12 எஞ்ஜினை ரீபிளேஸ் செய்யும் விதமாக இந்த எஞ்ஜினை எம்சி20 ஸ்போர்ட்ஸ் காரில் மஸராட்டி பயன்படுத்தியுள்ளது.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

இந்த எஞ்ஜின் 621 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது வி12 எஞ்ஜின் வெளியேற்றும் திறனுக்கு இணையானது. வி6 எஞ்ஜின் நேரடியாக பின் வீல்களுக்கு மட்டுமே இயங்கும் திறனை வழங்குகின்றன. இது 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனில் இந்த திறனை பின் வீலுக்கு வழங்குகின்றது.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

மஸராட்டி எம்சி20 ஸ்போர்ட்ஸ் கார் வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த காரின் பாடி பேனல்கள் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த கார் சாலையுடன் சாலையாக ஒட்டிச் செல்லும் மிக குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸையும் பெற்றிருக்கின்றது.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

குறிப்பாக, காரின் முகப்பு கிரில் பகுதியில் இடம்பெற்றிருக்கும் திரிசூலம் முத்திரை (சின்னம்) காருக்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கத்தரிக்கோள் போல் திறக்கும் கதவுகள் கொண்ட இந்த காரில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும்.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

காருக்குள் பிரீமியம் வசதிகள் பல இடம்பெற்றிருக்கின்றன. லெதர் உறை போர்த்தப்பட்ட இருக்கை, 10.25 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இணைப்பு வசதி கொண்டது), ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் என பல்வேறு சிறப்பு வசதிகள் எம்சி20 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த வருசம் டெலிவரி செய்ய இருக்கும் காருக்கு இப்பவே முன்பதிவை தொடங்கிய மசராட்டி! இதோட விலைகூட இன்னும் வெளியிடல!

மேலும், ஐந்து விதமான ரைடிங் மோட்கள் மஸராட்டி எம்சி20 காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஈரம், ஜிடி, ஸ்போர்ட், கோர்சா மற்றும் இஎஸ்சி ஆகியவை அவை ஆகும். இதனை தேர்வு செய்யும் வசதி சென்டர் கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் காரின் விலை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையிலேயே இந்த கார் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
Maserati Opens MC20 Sports Car Bookings In India. Read In Tamil.
Story first published: Saturday, June 26, 2021, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X