ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

முதல் மெக்லாரன் ஹைப்ரீட் காரின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

புதிய அர்துரா காரின் மூலம் ஒரு வழியாக மெக்லாரன் நிறுவனம் இரட்டை ஆற்றலில் இயங்கும் காரின் பக்கம் சென்றுள்ளது. ஏனெனில் அர்துரா கார்தான் மெக்லாரனின் முதல் ஹைப்ரீட் காராகும்.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

இந்த ஹைப்ரீட் காரை வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்த மெக்லாரன் திட்டமிட்டுள்ளது. அப்போதுதான் இந்த மெக்லாரன் காரின் தோற்றம் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு காட்டப்படும்.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

இதனால் இந்த மெக்லாரன் ஹைப்ரீட் காரின் தோற்றத்தை பற்றி இப்போதைக்கு நம்மால் எதையும் உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இந்த புதிய காரை புதிய ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைத்துள்ளதாக மெக்லாரன் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

இந்த காரில் இரட்டை-டர்போ வி6 என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படவுள்ளது. அதேநேரம் மற்ற மெக்லாரன் கார்களை போல் இந்த ஹைப்ரீட் காரும் பின் சக்கரங்களின் மூலமாக இயங்கும் விதத்தில் வழங்கப்படவுள்ளது.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

இந்த காரில் வழங்கப்படவுள்ள அம்சங்கள்தான் பெரும்பான்மையாக எதிர்கால மெக்லாரன் கார்களிலும் வழங்கப்படவுள்ளன. இதனால் பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான மெக்லாரனின் வருங்கால ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கு இதுதான் அடித்தளமாக விளங்கும்.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

புதிய அர்துரா ஹைப்ரீட், தற்போதைய மெக்லாரன் 570எஸ் காருக்கு மாற்றாக கொண்டுவரப்படுவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். 570எஸ் கார் அதிகப்பட்சமாக 562 எச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கும் வகையில் வழங்கப்படுகிறது.

ஹைப்ரீட் கார் தயாரிப்பில் இறங்கும் உலகளவில் பிரபலமான மெக்லாரன் நிறுவனம்!! முதல் கார் விரைவில் அறிமுகம்!

ஆனால் புதிய அர்துரா கார், எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியால் அதிகப்பட்சமாக 600 எச்பி-க்கும் அதிகமான ஆற்றலில் இயங்கும் விதத்தில் வழங்கப்படும். வெறும் எலக்ட்ரிக் மோட்டாரின் ஆற்றலின் மூலமாக மட்டுமே 20 மைல்கள் வரையில் அர்துரா காரை இயக்கி செல்லும் வகையில் மெக்லாரன் நிறுவனம் வழங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
Mclaren set to unveil its first hybrid supercar on February 16.
Story first published: Wednesday, February 3, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X