இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

உலகின் மிக பிரபலமான கார் பிராண்ட்களுள் ஒன்றான மெக்லாரன் இந்திய சந்தையில் நுழைய தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த செயல்திறன்மிக்க, தனித்துவமான சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமாக மெக்லாரன் விளங்குகிறது. தற்போதைக்கு உலகின் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களை எடுத்து பார்த்தோமேயானால், அதில் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்களும் இருக்கும்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

அந்த அளவிற்கு வெளிநாடுகளில் மெக்லாரன் தயாரிப்புகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் தான் மெக்லாரன் கார்கள் தற்போதைக்கு விற்பனையில் இல்லை. ஆனால் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு இருக்க போவதில்லை.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

ஏனெனில் இந்தியாவிலும் தனது காலடி தடத்தை பதிக்க மெக்லாரன் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், முதலாவதாக ஜிடி, அர்டுரா, 720எஸ் மற்றும் 720எஸ் ஸ்பைடர் என்ற நான்கு மாடல்கள் மெக்லாரன் பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட உள்ள இந்த நான்கு கார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்திய எக்ஸ்ஷோரூம் விலைகள் உள்ளிட்ட விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. ஆனால் உண்மையில், மெக்லாரனின் கார்களுக்கு அறிமுகமே தேவையில்லை.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

மெக்லாரன் கார்கள் அனைத்தும் கார்பன் ஃபைபர் வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக அவை அசத்தியமான ஓட்டுநர் இயக்கவியல் மற்றும் குறைவான கெர்ப் எடையினை பெறுகின்றன. இந்தியாவில் துவங்கத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் ஜிடி காரில் 4.0 லிட்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

அதிகப்பட்சமாக 603 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு எஸ்.எஸ்.ஜி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த மெக்லாரன் காரில் 100kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 3.2 வினாடிகளில் எட்டிவிட முடியும். அர்டுரா, மெக்லாரனின் முதல் அதி-செயல்திறன்மிக்க ஹைப்ரீட் சூப்பர் காராகும்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

புதிய மெக்லாரன் கார்பன் எடைகுறைவான கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்ட முதல் காரான இந்த ஹைப்ரீட் காரின் எடை வெறும் 1,395 கிலோ மட்டுமே ஆகும். இதில் பொருத்தப்படும் 3.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 569 பிஎச்பி மற்றும் 585 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

மெக்லாரன் 720எஸ், அதன் பிரிவில் பிரபலமான மாடலாக விளங்குகிறது. இதன் 4.0 லிட்டர் என்ஜின் 700 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 341கிமீ ஆகும்.

இந்திய சாலைகளை பதம் பார்க்க வரும் மெக்லாரன் கார்கள்!! நம்மூர் ரோடு தாங்குமா?

இதன் கூபே வெர்சன் தான் 720எஸ் ஸ்பைடர் ஆகும். இதனால் இதிலும் 720எஸ் காரின் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் இந்த காரில் 100kmph வேகத்தை 2.9 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். அதேபோல் இதன் டாப் ஸ்பீடு 325kmph ஆகும்.

Most Read Articles

மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
McLaren 720S, 720S Spider & Artura Confirmed For India Launch: All You Need To Know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X