இந்தியாவிற்கான அடுத்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களின் அறிமுக தேதி வெளியீடு!! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல!

மெர்சிடிஸின் புதிய ஏஎம்ஜி கார்களின் இந்திய அறிமுகம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவிற்கான அடுத்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களின் அறிமுக தேதி வெளியீடு!! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல!

ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸின் செயல்திறன் கார்கள் பிரிவான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இந்தியாவில் அதன் புதிய ஏஎம்ஜி இ53 4மேட்டிக்+ மற்றும் ஏஎம்ஜி இ63 எஸ் 4 மேட்டிக்+ கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்தியாவிற்கான அடுத்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களின் அறிமுக தேதி வெளியீடு!! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல!

இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த இரு ஏஎம்ஜி கார்களும் வருகிற 2021 ஜூலை 15ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நடப்பு 2021ஆம் ஆண்டில் புதியதாக மொத்தம் 15 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிற்கான அடுத்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களின் அறிமுக தேதி வெளியீடு!! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல!

இதில் இந்த இரு செயல்திறன்மிக்க செடான் கார்களும் அடங்குகின்றன. புத்துணர்ச்சியான தோற்றத்துடன், இந்த இரு ஏஎம்ஜி கார்களும் காஸ்மெட்டிக் மற்றும் தொழிற்நுட்ப அப்கிரேட்களை பெற்றுள்ளன. தோற்றத்தில் இ53 4மேட்டிக் கார், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஏஎம்ஜி கார்களுக்கு உண்டான க்ரில்லை பெற்றுள்ளது.

மத்தியில் மெர்சிடிஸின் லோகோ, அதன் இரு பக்கங்களிலும் தலா 5-ஸ்லாட்களை செங்குத்தாக கொண்டிருக்கும் இதன் க்ரில் பகுதி தான் காரின் அகலத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. இ53 4மேட்டிக் கார் 19-இன்ச் மற்றும் 20-இன்ச் தேர்வுகளில் இலகுவான 5-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் கிடைக்கவுள்ளது.

இந்தியாவிற்கான அடுத்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களின் அறிமுக தேதி வெளியீடு!! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல!

2021 ஏஎம்ஜி இ63 எஸ் காரை பொறுத்தவரையில், பெரிய மைய கூலிங் காற்று ஏற்பான் மற்றும் ஏஎம்ஜி கார்களின் சிறப்பு ரேடியேட்டர் க்ரில் உடன் முன்பக்கத்தை புதிய ஸ்டைலில் பெற்றுவரவுள்ளது. இந்த காரில் 20-இன்ச் 5-இரட்டை-ஸ்போக் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

அதேநேரம் காரின் காற்று இயக்கவியல் பண்புகளை ஆராய்பவர்களுக்காக 19 இன்ச்சில் 10-ஸ்போக் இலகுவான-அலாய் சக்கர தேர்வும் கொடுக்கப்பட உள்ளது. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், இ53 காரில் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின், இக்யூ பூஸ்ட் ஸ்டார்டர் உடன் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவிற்கான அடுத்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களின் அறிமுக தேதி வெளியீடு!! இரண்டும் ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல!

அதுமட்டுமின்றி இந்த ஏஎம்ஜி காரில் வழுக்கும், கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் தன்னிச்சையான என்ற ஐந்து டைனாமிக் செலக்ட் ட்ரைவ் மோட்களும் கொடுக்கப்பட உள்ளன. ஏஎம்ஜி இ63 எஸ் காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

இந்த வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 603 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த இரு ஏஎம்ஜி கார்களிலும் ஏஎம்ஜி செயல்திறன் 4மேட்டிக்+ அனைத்து-சக்கர-ட்ரைவ் யூனிட் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-AMG E53 and AMG E63 S to be launched in India on 15 July.
Story first published: Sunday, July 4, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X