அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

சொகுசு கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு கார் மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் மிக சரியான விலையில், சிறந்த மதிப்பை வழங்கும் மாடல்களை நிலைநிறுத்த போட்டா போட்டியில் இறங்கி உள்ளன. இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் புத்தம் புதிய ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

இதன்படி, வரும் மார்ச் 25ந் தேதி தனது ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரை இந்தியாவில் களமிறக்க மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த கார் சொகுசு கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

மிக குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்கள் சிறந்த வடிவமைப்புடன் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இரண்டு மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய்பபட இருக்கிறது.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் என்ற சாதாரண வகை சொகுசு கார் மாடலும், அதன் செயல்திறன் மிக்க ஏஎம்ஜி ஏ35 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

இதில், ஏ க்ளாஸ் லிமோசின் மாடலானது அனைத்து வசதிகளுடன் கொண்ட புராக்ரெஸ்ஸிவ் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், பெட்ரோல் எஞ்சின் (A200) மற்றும் டீசல் எஞ்சின் (A200d)தேர்வுகளில் கிடைக்கும். ஏஎம்ஜி ஏ35 மாடலில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும்.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

புதிய ஏ க்ளாஸ் லிமோசின் கார் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும்.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 147 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

விலை உயர்ந்த ஏஎம்ஜி ஏ35 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 302 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகததை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும்.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் முன்புறத்தில் அழகிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்டதாக இருக்கும். மேலும், பி பில்லர் வரை ஏ க்ளாஸ் ஹேட்ச்பேக் கார் மாடலை ஒத்திருக்கும். அதன் பிறகு மிக நேர்த்தியாக சேர்க்கப்பட்ட பூட் ரூம் மற்றும் சரியான விகிதத்தில் தாழ்ந்து சென்று முடியும் கூரை அமைப்புடன் கவர்கிறது.

அட்டகாசமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் அறிமுக தேதி வெளியானது!

புதிய ஏ க்ளாஸ் காரில் பனோரமிக் சன்ரூஃப், 2 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கும். ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வந்த பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz is all set to launch all new A-Class Limousine car in India on March 25, 2021.
Story first published: Tuesday, February 23, 2021, 16:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X