ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் போட்டியாளர்களை மிரள வைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் துவக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. அறிமுகத்தின்போதே, இரண்டு மாதங்களுக்கான புக்கிங் எண்ணிக்கையுடன் களமிறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை சொகுசு செடான் கார் மாடலாக ஏ க்ளாஸ் லிமோசின் கார் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கவரும் வகையிலான டிசைன், சிறப்பம்சங்களுடன் மிகச் சரியான விலையில் வந்துள்ள இந்த கார் சொகுசு கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

இந்த நிலையில், அறிமுக நிகழ்ச்சியின்போதே, இந்த காருக்கான புக்கிங் விபரம் குறித்த தகவலும் வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் மே மாதம் வரை இந்த காருக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

அதாவது, ஏப்ரல் மற்றும் மே ஆகிய முதல் இரண்டு மாதங்களுக்கான புக்கிங் முடிந்துவிட்டது. வரும் ஜூன் மாதத்திற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஷ்வென்க் கூறி இருக்கிறார்.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் ரூ.39.90 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்கள் மற்றும் அதிசெயல்திறன் மிக்க ஏஎம்ஜி வெர்ஷனிலும் வந்துள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், கண் புருவத்தை நினைவூட்டும் வடிவமைப்பில் எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

இந்த காரின் இன்டீரியரும் மிகவும் கவரும் வகையில் உள்ளது. டர்பைன் வடிவிலான இதன் ஏசி வென்ட்டுகள் எல்லோரையும் ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது. அதேபோன்று, இன்ஃபோடெயெின்மென்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளட்டர் ஆகியவை ஒரே அமைப்பாக இரண்டு திரைகளுடன் வந்திருப்பதும் இதன் தனித்துவமான அம்சமாக உள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் என ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் காரின் ஏ200 மாடலில் உள்ள 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

இதன் ஏ220டீ என்ற டீசல் மாடலில் உள்ள எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

இதன் ஏஎம்ஜி ஏ35 மாடலில் உள்ள 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 301 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமே அதிரடி... புக்கிங்கில் அசத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் கார் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் மாடலுடன் போட்டி போடுகிறது. ஆரம்ப ரக சொகுசு செடான் கார் வாங்க விரும்புவோரின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது.

Most Read Articles

English summary
Mercedes Benz has announced that it has received overwhelming response for all new A Class Limousine car India and it sold out till May.
Story first published: Friday, March 26, 2021, 9:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X