Just In
- 7 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 10 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 12 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் இந்தியாவில் உற்பத்தியாக உள்ள 2வது கார்... மிக சவாலான விலையில் வர வாய்ப்பு!
விலையை சவாலாக நிர்ணயிக்கும் விதமாக, ஏ க்ளாஸ் ஏஎம்ஜி செடான் காரை இந்தியாவிலையே உற்பத்தி செய்ய உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இதனால், இந்த ஆரம்ப ரக சொகுசு பெர்ஃபார்மென்ஸ் கார் குறித்து இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதமாக, மிக சவாலான விலையில் கார்களை களமிறக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். அதன்படி, இந்தியாவிலேயே இரண்டாவது ஏஎம்ஜி காரை உற்பத்தி செய்ய உள்ளது. இந்த இரண்டாவது கார் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பல கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உயர்வகை சொகுசு கார்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டின் பெர்ஃபார்மென்ஸ் வகை கார்கள் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஏஎம்ஜி கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்தது. அதன்படி, முதல் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி43 ஏஎம்ஜி கூபே கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. கடந்த நவம்பரில் இந்த மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது கார் மாடலையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 25 ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய ஏ க்ளாஸ் லிமோசின் செடான் காரின் ஏஎம்ஜி மாடலை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலமாக, புதிய ஏ க்ளாஸ் லிமோசின் ஏ35 ஏஎம்ஜி காரின் விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் செடான் காரைவிட இந்த ஏ35 ஏஎம்ஜி மாடல் அதிசெயல்திறன் மிக்க மாடலாக வர இருக்கிறது.

இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 301 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

சாதாரண ஏ க்ளாஸ் லிமோசின் செடான் காரைவிட தோற்றத்திலும் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் கவர்ச்சிகரமாக இருக்கும். இதனால், இந்த கார் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு தனி கவனம் இருந்து வருகிறது. சரியான விலையில் கொண்டு வரும்பட்சத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையை பிடிக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நம்புகிறது.

இந்த காரில் ஏஎம்ஜி மாடல்களுக்குரிய தனித்துவமான க்ரில் அமைப்பு, இரட்டை குழல் சைலென்சர், மிரட்டலான பம்பர்கள், ரியர் டிஃபியூசர், விசேஷ ஸ்டீயரிங் வீல், எம்பியூஎக்ஸ் கனெக்ட்டிவிட்டி வசதி, டச்பேடு, ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ரூ.40 லட்சத்தையொட்டி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் மாடல்களுக்கு விலை நிர்ணயிக்கப்படும்.