அடுத்த புதிய பென்ஸ் காரின் அறிமுகம் வருகிற பிப்ரவரி 23ல்..!! என்ன மாதிரியான கார் தெரியுமா?
புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கார் உலகளவில் வருகிற பிப்ரவரி 23ஆம் வாடிக்கையாளர்களுக்கு காட்சிதரவுள்ளதாக புதிய டீசர் படங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் படங்களை பற்றி மேலும் இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த டீசர் படங்களின்படி, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சி-கிளாஸ் காரை வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி உலகளாவிய டிஜிட்டல் ப்ரீமியரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய எம்ஆர்ஏ2 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தலைமுறை பென்ஸ் கார் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட இ-கிளாஸ் காரில் இருந்து புதிய டிசைனை பெற்று வரவுள்ளது.

இந்த மெர்சிடிஸ் கார் முன்பக்கத்தில் சிங்கிள்-ஸ்லாட் க்ரில் மற்றும் முந்தைய எக்ஸெனான் ஜோடி ஹெட்லைட்களுக்கு பதிலாக முழு-எல்இடி லைட்களையும், புதிய பின்பக்க ஹெட்லைட்களை தவிர்த்து பக்கவாட்டு மற்றும் பின்பகுதியில் பெரிய அளவில் மாற்றம் எதையும் பெறாததையும் இந்த காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளிக்காட்டிருந்தன.

உட்புறத்தில் புதிய இ-கிளாஸை தொடர்ந்து புதிய சி-கிளாஸ் காரும் லேட்டஸ்ட் இரண்டாம்-தலைமுறை எம்பக்ஸ் தொடுத்திரையை பெற்று வரவுள்ளது. அதேபோல் மைய கன்சோலின் இடமும் சிறிது மாற்றப்பட்டிருக்கலாம். இவை தவிர்த்து புதிய சி-கிளாஸ் காரில் வேறு என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

வழக்கமான அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் ப்ளக்-இன் ஹைப்ரீட் மற்றும் மைல்ட்-ஹைப்ரீட் வெர்சனிலும் இந்த அப்டேட் மாடல் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சந்தைகளில் இந்த காருக்கு ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் கார்கள் போட்டியாக உள்ளன.

இந்தியாவில் மெர்சிடிஸ் சி-கிளாஸ் செடான் காருக்கான அப்டேட் தகவல் வெளிவந்து பல மாதங்களாகிவிட்டன. இதனால் புதிய ஐந்தாம் தலைமுறை சி-கிளாஸ் காரின் இந்திய வருகையையும் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








