700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

மின்சார கார் உலகில் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் அதிசிறந்த சொகுசு கார் மாடலை மெர்சிடிஸ் களமிறக்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் திறன் வாய்ந்த பேட்டரிகளுடன் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு அனைத்து நிறுவனங்களுமே தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் அதிதிறன் வாய்ந்த பேட்டரியுடன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், டெஸ்லா கார் சந்தையை உடைக்கும் வகையில், அவற்றைவிட அதிக பயண தூரத்தை வழங்கும் திறன் வாய்ந்த பேட்டரிகளை உருவாக்கும் முயற்சியில் பிரபல கார் நிறுவனங்கள் வரிந்து கட்டி இறங்கி உள்ளன. அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிதிறன் வாய்ந்த பேட்டரியை உருவாக்கி இருக்கிறது.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த புதிய பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய பேட்டரி குறித்து புகழ் பாடி வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய செயல்திறன் மிக்க பேட்டரியுடன் எஸ் க்ளாஸ் காரின் மின்சார மாடல் வரும் ஏப்ரல் 15ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரில் 108kWh பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

மேலும், எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட இருக்கும் இந்த பேட்டரியின் உற்பத்தி துவங்கிவிட்டதாகவும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். உலகின் சிறந்த சொகுசு கார்களில் ஒன்றாக பெயர்பெற்றுள்ள எஸ் க்ளாஸ் காரின் மின்சார மாடலானது EQS என்ற பெயரில் வர இருக்கிறது. அதாவது, மின்சார கார்களை EQ என்ற பிராண்டு பெயரிலும், S என்ற கார் மாடல் பெயரையும் சேர்த்து EQS என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் கார் முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, உலகின் பிற நாடுகளிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த கார் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரின் டேஷ்போர்டில் மூன்று மின்னணு திரைகள் இடம்பெற இருக்கின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும். இந்த கார் கண்ணீர் துளியை மனதில் வைத்து டிசைன் செய்துள்ளனர். இதனால், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 700 கிமீ ரேஞ்ச்... டெஸ்லாவை தூக்கி அடிக்க வரும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் எலெக்ட்ரிக் கார்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் சொகுசு எலெக்ட்ரிக் காருக்காக உலக அளவில் 5 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பாவில் மட்டும் 2 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தானியங்கி முறையில் சார்ஜ் ஏற்றுவதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் வசதியும் கொடுக்கப்பட உள்ளது.

Most Read Articles

English summary
Mercedes-Benz has commenced production of 700 km plus range EV Li-ion battery and it will feature on all new EQS electric sedan car.
Story first published: Tuesday, March 23, 2021, 17:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X