Just In
- 19 min ago
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 3 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Don't Miss!
- Finance
1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜிஎம் நிறுவனம்.. என்ன காரணம்..?!
- News
மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்தார் விவேக்... அவரது மறைவு பேரிழப்பு - பிரேமலதா
- Lifestyle
ஓட்ஸ் சாப்பிடும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் நமக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்காம்...!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒவ்வொரு பயணத்திலும் உங்களை மெய்மறக்கச் செய்யும்... புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் விற்பனைக்கு அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரம் உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியர்களின் விருப்பமான மாடல்
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இருந்து வருகிறது. 1995ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை 46,000 இ க்ளாஸ் சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனை செய்ய்பபட்டுள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்கள்
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2021 மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

லாங் வீல் பேஸ் மாடல்
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் (LWB) கொண்ட மாடல்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாடலும் லாங் வீல் பேஸ் மாடலாகவே தொடர்ந்து கிடைக்கும். கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட அதே மாடல்தான் இந்தியாவிலும் வந்துள்ளது.

சிறப்பான இடவசதி
சாதாரண மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரைவிட இந்த லாங் வீல் பேஸ் மாடலானது 140 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டது. இதனால், பின் வரிசை இருக்கையில் மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும். அதாவது, ஒரு அறையில் சொகுசு இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற உணர்வை தரும்.

வெளிப்புற அம்சங்கள்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் லாங் வீல் பேஸ் மாடலில் புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. கண் புருவத்தை பிரதிபலிக்கும் வகையிலான எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர், கவர்ச்சிகரமான புதிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ஏஎம்ஜி மாடலில் வேறுபட்ட க்ரில் அமைப்பு உள்ளிட்ட கூடுதல் கவர்ச்சிகரமான அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன.

உட்புற அம்சங்கள்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் இரண்டு 12.3 அங்குல மின்னணு திரைகள் உள்ளன. இதில், ஒன்று தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும் செயல்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட எம்பியூஎக்ஸ் செயலியும், புதிய வாய்ஸ் கமாண்ட் சிஸ்டமும் உள்ளன.

தொழில்நுட்ப வசதிகள்
இந்த காரில் டைனமிக் செலக்ட் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், ஏர் சஸ்பென்ஷன், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் மற்றும் மெமரி வசதியுடன் கூடிய பின் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், இரண்டு வயர்லெஸ் சார்ஜர்கள், பர்ம்ஸ்டெர் சவுண்ட் சிஸ்டம், எம்கனெக்ட் என்ற கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரில் 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமராவுடன் ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் என ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

மூன்று எஞ்சின் தேர்வுகள்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் (E200) இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரின் 2.0 லிட்டர் (E220d) டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 192 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மற்றொரு சக்திவாய்ந்த 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் (E350d) அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மூன்று எஞ்சின் தேர்வுகளுடன் 9ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது.

செயல்திறன்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் லாங் வீல் பேஸ் மாடலின் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் மாடல்களானது 0 - 100 கிமீ வேகத்தை 7.6 வினாடிகளிலும், 3.0 லிட்டர் டீசல் மாடலானது 6.1 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

வேரியண்ட்டுகள் & விலை விபரம்
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் லாங் வீல் பேஸ் மாடலானது 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடலின் எக்ஸ்பிரஷன் வேரியண்ட்டிற்கு ரூ.63.60 லட்சம் விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ.67.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் 2.0 லிட்டர் டீசல் மாடலின் எக்ஸ்பிரஷன் வேரியண்ட் ரூ.64.8 லட்சம் விலையிலும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் ரூ.68.30 லட்சம் விலையிலும் கிடைக்கும். இதன் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஒரே வேரியண்ட்டில் வந்துள்ளது. இந்த டாப் வேரியண்ட்டிற்கு ரூ.80.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.