பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யுசி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை அறிமுகத்தில் இருந்து இதுவரையில் மட்டுமே ரூ.4.7 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.04 கோடியாக உள்ளது.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் இக்யுசி எஸ்யூவி மாடலை கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் லக்சரி காராக அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து தற்போது வரையில் இந்த எலக்ட்ரிக் காரின் விலை ரூ.47 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

இந்தியாவில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் இக்யுசி காரின் முதல் தொகுப்பிற்கு (50 யூனிட்கள்) எதிர்பார்த்ததை போலவே வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் தொகுப்பு இக்யுசி கார்கள் வேகமாகவே விற்று தீர்ந்தன.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

எனவே சிலர் இந்த எலக்ட்ரிக் காரை வாங்க திட்டமிட்டு, வாங்க முடியாமல் போயிருக்கலாம். அத்தகையவர்களுக்காகவே மெர்சிடிஸ் நிறுவனம் இக்யுசி காரின் இரண்டாவது தொகுப்பிற்கான முன்பதிவுகளை மீண்டும் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

இந்த 2வது தொகுப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இக்யுசி கார் டெலிவிரி செய்யும் பணிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. இரண்டாவது தொகுப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கப்பட்ட ரூ.4.7 லட்சத்தையும் செலுத்தி வேண்டி இருக்கும்.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

இது மெர்சிடிஸ் இக்யுசி காரின் முதல் தொகுப்பை வாங்கியவர்களுக்கு சாதகமானதாக அமைந்துவிட்டது. இந்தியாவில் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில், சிபியு முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் இக்யுசி காரில் 80 கிலோவாட்ஸ் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

முன் மற்றும் பின்பக்கத்தில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார்களில் பொருத்தப்படும் இந்த பேட்டரி தொகுப்பின் உதவியுடன் 405 பிஎச்பி மற்றும் 765 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். அதிகப்பட்சமாக சிங்கிள் சார்ஜில் 471 கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இக்யுசி மாடல் விளங்குகிறது.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறன் கொண்டதாக உள்ள இந்த மெர்சிடிஸ் எலக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு 180kmph ஆகும். வெறும் 40 நிமிடங்களில் பேட்டரியின் சார்ஜை 0-வில் இருந்து 80 சதவீதம் நிரப்பிவிடக்கூடிய விரைவு-சார்ஜிங் தொழிற்நுட்பம் இக்யுசி காரில் வழங்கப்படுகிறது.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

மெர்சிடிஸ் பிராண்டின் எம்பக்ஸ் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் இக்யுசி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் உட்புறத்தில் இன்ஃபோடெயின்மெண்ட்டிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என மொத்தம் இரு திரைகள் 10.3 இன்ச்சில் வழங்கப்படுகின்றன.

பேசாம அப்போதே வாங்கி இருக்கலாம்!! முதல் எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலை 1 வருடத்திற்குள் ரூ.4.7லட்சம் அதிகரிப்பு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை இந்திய சந்தையில் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடே முதல் தொகுப்பு இக்யுசி விரைவாக விற்று தீர்க்கப்பட்டதும். இருப்பினும் இந்த லக்சரி எலக்ட்ரிக் காரின் இரண்டாவது தொகுப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4.7 லட்சம் அதிகரிப்பு சற்று உறுத்தலாகவே இருக்கும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz increases the price of the EQC electric SUV at 1.04 crore, ex-showroom. The prices have increased by Rs 4.7 lakh over the introductory pricing of the electric SUV after its launch last year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X