2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் காரின் படங்கள் அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

முற்றிலும் புதிய சி-கிளாஸ் செடான் காரை நாளை (பிப்ரவரி 23) வெளியிட மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக தான் தற்போது இந்த பென்ஸ் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

புதிய சி-கிளாஸ் தற்போதைய எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் என கூறப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் கிட்டத்தட்ட எஸ்-கிளாஸின் தோற்றத்தை தான் இந்த காரும் கொண்டிருப்பதால் அவ்வாறு சொல்வதில் எந்த தவறும் இல்லை.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

புதிய சி-கிளாஸ் காரின் பரிமாண அளவுகள் குறைவாகதான் இருக்கும் என்றாலும் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் நமக்கு எஸ்-கிளாஸை தான் ஞாபகப்படுத்துகின்றன. இருப்பினும் காரின் முன்பக்கம் புதிய மற்றும் பெரிய ரேடியேட்டர் க்ரில் உடன் சற்று அதிகமாகவே கூர்மையானதாக நீண்டுள்ளது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

ஹெட்லைட்கள் முன்பக்கத்தில் நேர்த்தியான தோற்றத்திலும், பின்பக்கத்தில் சமீபத்திய பென்ஸ் கார்களை போன்று கிடைமட்டமான வடிவிலும் உள்ளன. இருந்தாலும், தற்போதைய சி-கிளாஸ் உடன் ஒப்பிடும்போது அதன் புதிய தலைமுறை நிறைய விஷயங்களில் வேறுப்படுகிறது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

உட்புறத்தில் குறிப்பிடத்தக்க வகையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய டேஸ்போர்டு நேர்த்தியாக ஒற்றிணைக்கப்பட்ட டேப்லெட் வடிவிலான தொடுத்திரையை கொண்டுள்ளது. இந்த தொடுத்திரையின் அளவு மற்றும் இதன் மூலம் பெறக்கூடிய வசதிகள் உள்ளிட்டவை எதுவும் தற்போதைக்கு தெரியவில்லை.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

எப்படி இருந்தாலும் அவை அனைத்தும் நாளை வெளியிடப்பட்டுவிடும். இந்த அப்கிரேட்கள் அனைத்தும் மெர்சிடிஸ் சி-கிளாஸ் வரிசையில் உள்ள ஏஎம்ஜி சி53 மற்றும் சி63 மாடல்களிலும் தொடரப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸின் படங்கள் இணையத்தில் கசிந்தன!! எஸ்-கிளாஸின் பேபி வெர்சன் போல...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய சி-கிளாஸ் செடான் காரில் புதிய 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் அடுத்ததாக மெர்சிடிஸ் தயாரிப்பாக புதிய ஏ-கிளாஸ் லிமௌசைன் இந்த 2021ஆம் வருடத்தில் விற்பனையை துவங்கவுள்ளது. புதிய தலைமுறை சி-கிளாஸின் இந்திய வருகை அடுத்த 2022ஆம் ஆண்டில் இருக்கலாம்.

Most Read Articles
English summary
2021 Mercedes-Benz C-Class Images Leaked Ahead Of Global Debut
Story first published: Monday, February 22, 2021, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X