மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இக்யுஎஸ் (EQS) எலக்ட்ரிக் செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் தற்போது இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இக்யுஎஸ் காரின் பெயருடன் "மிக விரைவில்" என ஆங்கிலத்தில் அடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

மெர்சிடிஸின் எலக்ட்ரிக் வாகன இயக்குத்தளத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படும் முதல் காராக இக்யுஎஸ் விளங்குகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான எலக்ட்ரிக் கார்களை போன்று இதன் க்ரில் அமைப்பும் மூடப்பட்டுள்ளது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

முன்பக்க மற்றும் பின்பக்க எல்இடி ஹெட்லைட்கள் ஜோடி ஜோடியாக எல்இடி ஸ்ட்ரிப் மூலம் இந்த எலக்ட்ரிக் காரில் இணைக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் இந்த கார் பிராண்டின் லேட்டஸ்ட் ஹைப்பர் திரையை பெற்றுள்ளது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

இதன் மூலமாக இக்யுஎஸ் காரின் டேஸ்போர்டு மூன்று டிஜிட்டல் திரைகள் உடன் வழங்கப்படுகிறது. இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது, மற்ற இரண்டு இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் முன் இருக்கை பயணிக்கானது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

உலகளாவிய சந்தைகளில் 450+ மற்றும் 580 4மேட்டிக் என்ற இரு விதமான வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யுஎஸ் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிலும் 107.8 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

ஆனால் எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை வேறுப்படுகிறது. மெர்சிடிஸ் இக்யுஎஸ் 580 வேரியண்ட்டில் காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக 523 பிஎச்பி மற்றும் 856 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் பெறுகிறது.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

ஆனால் 450+ வேரியண்ட்டில் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமே பின்பக்கத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வேரியண்ட்டில் 334 பிஎச்பி மற்றும் 458 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

இக்யுஎஸ் எலக்ட்ரிக் செடான் காரின் இந்த பேட்டரியை முழுவதும் சார்ஜ் ஏற்றி கொண்டு அதிகப்பட்சமாக 770கிமீ வரையில் பயணிக்க முடியும் என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 210kmph ஆகும்.

மற்றொரு எலக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ்!! பிராண்டின் வெப்சைட்டில் காரின் பெயர்!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் நடப்பு 2021ஆம் ஆண்டிற்குள் புதியதாக 7 ஏஎம்ஜி கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெர்சிடிஸ் அறிவித்துள்ளது. இதில் சில கார்கள் மஹாராஷ்டிராவில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.

Most Read Articles

English summary
Mercedes-Benz to launch EQS in India; listed on the website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X