இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் அனைத்து-சாலை காரின் பெயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

மெர்சிடிஸ் இ-க்ளாஸ் முதன் முதலாக 1993ல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் ஐந்து தலைமுறைகள் இ-க்ளாஸ் வேகன் காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

இந்தியாவில் பொதுவாகவே லக்சரி எஸ்டேட் கார்களுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இருப்பதில்லை. இந்த நிலை அப்படியே மெர்சிடிஸின் இந்த அனைத்து-சாலைக்குமான வேகன் எஸ்டேட் காரிலும் தொடர்ந்தது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

வால்வோ வி90 க்ராஸ் கண்ட்ரீ காருக்கு போட்டியாக விளங்கிவந்த மெர்சிடிஸ் இ-க்ளாஸ் அனைத்து-சாலை காரை வாடிக்கையாளர்கள் கண்டு கொள்ளாததால் தற்போது இதன் விற்பனையை நமது இந்திய சந்தையில் தயாரிப்பு நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

க்ராஸ்ஓவர் தோற்றத்திற்காக இந்த வாகனத்திற்கு ஏகப்பட்ட முரட்டுத்தனமான தோற்றத்தை தரக்கூடிய உடற் தொகுப்புகளை மெர்சிடிஸ் வழங்கியது. இருப்பினும் நம் நாட்டு விஐபி-களின் கவனத்தை இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் பெறாமலே போய்விட்டது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

இ-க்ளாஸ் ஆல்-டெர்ரைன் காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டன. அதிகப்பட்சமாக 192 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது 4மேட்டிக் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும் விதத்தில் கொடுக்கப்பட்டது. அனைத்து விதமான சாலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய வாகனமாக இந்த இ-க்ளாஸ் கார் சந்தைப்படுத்தப்பட்டதால் இந்த காரில் ஏகப்பட்ட ட்ரைவிங் மோட்கள் வழங்கப்பட்டன.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

இதில் ஆஃப்-ரோடுகளுக்கான அமைப்புகளை வழங்கும் அனைத்து-சாலை ட்ரான்ஸ்மிஷன் மோடும் அடங்கும். இவை மட்டுமின்றி இ-க்ளாஸ் அனைத்து-சாலை வெர்சன் சிறப்பம்சமாக காற்று-சஸ்பென்ஷன் உடனும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

இத்தகைய சஸ்பென்ஷன் அமைப்பினால் காரின் உயரம் கிட்டத்தட்ட 35மிமீ வரையில் அதிகரிக்கும். அப்சிடியன் கருப்பு, டிசைனோ பதுமராகம் சிவப்பு, செலினைட் க்ரே, இரிடியம் வெள்ளி மற்றும் பனி துருவத்தின் வெள்ளை என்ற ஐந்து விதமான நிறத்தேர்வுகளில் இந்த மெர்சிடிஸ் செடான் கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.77.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டன. இ-க்ளாஸ் அனைத்து-சாலை காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள இதேவேளையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இ-க்ளாஸ் லாங் வீல்பேஸ் காரின் 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை புதியதாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து நடையை கட்டும் அடுத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்

ரூ.63.6 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த இ-க்ளாஸ் செடான் மாடலில் இ 200 எக்ஸ்ப்ரேஷன், இ 200 எக்ஸ்க்ளூசிவ், இ 200டி எக்ஸ்ப்ரேஷன், இ 200டி எக்ஸ்க்ளூசிவ் மற்றும் இ350டி என்ற ஐந்து விதமான வேரியண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Mercedes-Benz E-Class All-Terrain removed from website. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X