இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

2021 மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய சந்தைக்கான புதிய டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் செடான் மாடலான இ-க்ளாஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை வருகிற 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக தான் தற்போது இந்த டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

இருப்பினும் இந்த டீசர் படத்தில் காரின் எரியும் ஹெட்லைட் & டெயில்லைட் மற்றும் மெர்சிடிஸ் லோகோவை கொண்ட க்ரில் அமைப்பை தவிர்த்து வேறெதையும் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு பீஜிங் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் உலகளவில் விற்பனை கொண்டுவரப்பட்டு 6 மாதங்களாகி விட்டன.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

வலது-கை ட்ரைவ் மார்க்கெட்டான இந்தியாவில் வழக்கமான மாடலை காட்டிலும், 140மிமீ அதிக வீல்பேஸ் கொண்ட மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. வீல்பேஸ் அதிகரிக்கப்படுவதினால் காரின் நீளமும் உயர்ந்துள்ளது.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

ஆனால் உயரம் மற்றும் அகலத்தில் எந்த மாற்றமும் இருக்காது. 2021 மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் புதிய ஹெட்லேம்ப்கள், ரீஸ்டைலில் பம்பர், அகலமான க்ரோம்டு க்ரில், சுற்றிலும் க்ரோம்-ஐ கொண்ட ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றுடன் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கத்தை பெற்றுள்ளது.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

அதேபோல் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லேம்ப்கள் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின் கதவு புதிய வடிவிலும், பம்பர் அப்டேட் செய்யப்பட்டதாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அலாய் சக்கரங்களையும் புதிய தொகுப்பாக புதிய நிறங்களில் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

வெளிப்புறத்தை போன்று இந்த 2021 ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புற கேபினும் புதிய வசதிகள் மற்றும் தொழிற்நுட்பங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. உட்புறத்தில் பின் இருக்கையின் சவுகரியத்தை, புதிய பின் இருக்கைக்கான மைய கன்சோல் தொடுத்திரை, இரட்டை யுஎஸ்பி துளைகள் உள்ளிட்டவற்றுடன் மேம்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா வரும் அடுத்த பென்ஸ் காரின் டீசர் படம் வெளியீடு!! வருகிற 16ஆம் தேதி அறிமுகம்!

மற்றப்படி காரின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி ஏ6 மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் உள்ளிட்டவற்றின் போட்டியினை சமாளித்து வரும் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ் காரின் விலைகள் தற்சமயம் ரூ.62.78 லட்சத்தில் இருந்து ரூ.1.53 கோடி வரை உள்ளன. இவற்றை காட்டிலும் சற்று கூடுதல் விலையிலேயே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

Most Read Articles
English summary
Mercedes E-Class 2021 launch on March 16, promises to up luxury & tech factors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X