கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ள கார் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து துவங்கி கடந்த ஜூன் 30ஆம் தேதி வரையிலான ஆண்டின் இந்த இரண்டாம் கால்பகுதியில் மொத்தம் 1,664 கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

இந்த எண்ணிக்கை 2020ல் இதே கால்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும் சுமார் 196.09 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த சமயத்தில் வெறும் 562 பென்ஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது 2020 மார்ச் மாதம் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இதனால் மார்ச் மாத மத்தியில் இருந்து மே மாத மத்தியில் வரையில் வாகன விற்பனை முற்றிலுமாக தடைப்பட்டு போனது. இதில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் சிக்கிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

இருப்பினும் 1,664 என்ற எண்ணிக்கையும் வழக்கமான விற்பனையை காட்டிலும் சற்று குறைவே. 2019, 18 & 17ஆம் ஆண்டுகளில் இதே இரண்டாம் கால்பகுதியில் 2,500-ல் இருந்து 3,500 வரையிலான எண்ணிக்கைகளில் கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் விற்றிருந்தது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

இந்த ஆண்டு 2ஆம் கால்பகுதியில் விற்பனை சிறிது குறைந்துள்ளதற்கு காரணம், கொரோனாவின் இரண்டாவது அலையாகும். மொத்தமாக நடப்பு 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 5 ஆயிரத்திற்கும் சற்று குறைவான எண்ணிக்கையிலேயே பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

2020ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,948 யூனிட் கார்களை இந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் விற்றிருந்தது. ஆனால் வழக்கமான ஆண்டின் முதல் அரையாண்டில் குறைந்தது 6,500 கார்களையாவது இந்த நிறுவனம் விற்பனை செய்துவிடும், முந்தைய ஆண்டுகளின் விற்பனை நிலவரமும் இதை தான் காட்டுகின்றன.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

கொரோனாவின் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் தற்போது தான் மெல்ல மெல்ல குறைந்துவருவதால் மீண்டும் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட இந்த ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டது. இதன் தொழிற்சாலை பணிகள் அனைத்தும் தற்போதைக்கு அந்தந்த மாநில டீலர்களின் அறிவுறுத்தலின்படியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

கடந்த மாதங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏ-கிளாஸ் லிமௌசைன் மற்றும் முற்றிலும் புதிய ஜிஎல்ஏ கார்கள் நிறுவனத்தின் 2021 முதல் அரையாண்டின் விற்பனையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. நீண்ட வீல்பேஸ் இ-கிளாஸ் மெர்சிடிஸின் சிறந்த விற்பனை மாடலாக விளங்குகிறது.

கொரோனா 2வது அலைக்கு மத்தியிலும் 1,664 கார்களை விற்றுள்ள மெர்சிடிஸ்!! கடந்த ஆண்டை காட்டிலும் 200% அதிகரிப்பு!

அதனை தொடர்ந்து ஜிஎல்இ மாடல் உள்ளது. இதுவரையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய இணைப்பு கார்களின் எண்ணிக்கை 10,600 ஆகும். கடந்த ஆறு மாதங்களில் மெர்சிடிஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ள கார்களில் 20 சதவீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டவைகளாகும்.

Most Read Articles

English summary
Mercedes-Benz India clocks strong growth in H1 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X